மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட டோணி தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே சென்றுள்ளது. இரு அணிகளும் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில்தான் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும்.


இந்த இரு அணிகளிடையே நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது. ஏற்கெனவே ஒரு போட்டியில் வென்றதால் இன்றைய போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இந்திய அணி உள்ளது.