புதுடெல்லி: பெரோசா கோட்லா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி டெல்லி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. தர்மசாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின, முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. நியூசிலாந்து அணி 43.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது.


இந்திய அணி 43.5 ஒவர்களில் 4 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்து  வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணியான விராத் கோஹ்லி 85 ரன்கள் அதிகபட்சமாக  எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தார். 


இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையே 2-வது ஒருநாள் போட்டி டெல்லி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தார். இதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்து வருகிறது.



 


இந்தியா அணி வீரர்கள்: ரஹானே, ரோகித் சர்மா, விராட் கோலி, மனிஷ் பாண்டே, டோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், பும்ரா.


நியூசிலாந்து அணி வீரர்கள்: டாம் லாதம், மார்ட்டின் கப்தில், கனே வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன், ஆண்டன் டேவ்சிக், லூக் ரோஞ்சி, மிட்செல் சண்டனர், டி சவுதி, மட் ஹென்றி, டிரவுண்ட் பவுல்ட்.


 



 


 



/p>