இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 52.3 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பிளாக்வுட் 62 ரன்னும், சாமுவேல்ஸ் 37 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி தலா 2 விக்கெட்டும், அமித் மிஸ்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.


பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 75 ரன்களுடனும், புஜாரா 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்து, 162 ரன்கள் முன்னிலை வகித்திருந்தது. அஜின்கியா ரகானே (42), விரிதிமன் சகா (17) அவுட்டாகாமல் இருந்தனர்.


மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த சகா 47 ரன்னில் அவுட்டாகி, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரகானே அசத்தல் சதம் அடித்தார். 24-வது  டெஸ்டில் விளையாடும் ரகானேவுக்கு இது 7-வது சதமாகும். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த மிஸ்ரா(21) சேஸ் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்திய சேஸ், அடுத்தடுத்த சமி(0) யாதவ்(19) ஆகியோரை பெவிலியன் அனுப்பினர்.


முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 500 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியை விட இந்தியா 304 ரன்கள் என வலுவான முன்னிலை பெற்றது. ரகானே 108 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சேஸ் 5 விக்கெட் கைபற்றினார்.


தொடர்ந்து மழை பெய்ய ஆட்டம் பாதிக்கப்பட்டதால் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.