சிஎஸ்கே அணியில் தோனியை விட அதிக சம்பளம் வாங்கும் 3 வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் எம்எஸ் தோனியை விட கூடுதல் சம்பளம் வாங்கும் 3 வீரர்கள் உள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தான் அதிகம் சம்பளம் வாங்குவதாக ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் தோனியை விட மிகவும் அதிகமான தொகையை ஊதியமாக வாங்கும் வீரர்கள் 3 பேர் அந்த அணியில் இருக்கிறார்கள். கடந்த முறை நடைபெற்ற ஏலத்தின்போது நல்ல பிளேயர்களை அணியில் எடுக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்ட தோனி, தீபக் சாஹர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை கூடுதல் விலை கொடுத்து அணிக்கு வாங்கியுள்ளார்.
மேலும் படிக்க | IND vs WI: முதல் போட்டி தோல்வி! அதிரடியாக அணியை மாற்றிய ஹர்திக்!
தீபக் சாஹர்
இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் தீபக் சாஹர், 2018 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் இவர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் அதாவது 2022 சீசனில் 14 கோடி கொட்டிக் கொடுத்து அணிக்கு வாங்கியுள்ளது. இது தோனியின் சம்பளத்தை விட கூடுதலாகும்.
ரவீந்திர ஜடேஜா
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தடுமாறிய இவரை தோனியின் அரவணைப்பில் வளர்ந்தவர் என்றே சொல்லலாம். அதனால் 2012 முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அவரை வாங்க வேண்டும் என்று விரும்பியதன் அடிப்படையில் அப்போது முதல் தோனியின் தளபதிகளில் ஒருவராக உள்ளார். அவரை 16 கோடி கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்திருக்கிறது.
பென் ஸ்டோக்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலேயே அதிக சம்பளம் வாங்கும் வீரர் பென் ஸ்டோக்ஸ். 16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ஏலம் எடுத்தது. ஆனால், இவரால் கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக அதிக போட்டிகளில் விளையாட முடியவில்லை. மேலும், இறுதிப்போட்டிக்கு முன்பாகவே இங்கிலாந்து அணிக்கு விளையாடுவதற்காக கிளம்பி சென்றுவிட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ