விராட் கோலியால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புறக்கணிக்கப்பட்ட 3 வீரர்கள்
இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி கேப்டனாக இருந்தபோது புறக்கணிக்கப்பட்ட 3 வீரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வோம். சிறப்பாக விளையாடியபோதும் அவர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணயின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவரது கீழ், இந்தியா டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது மற்றும் வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஐசிசி தொடர்களில் ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை என்றாலும், முக்கிய சுற்றுகள் வரை இந்திய முன்னேறியது. அவர் கேப்டனாக இருந்தபோது, சில தைரியமான முடிவுகளை எடுத்தார். அவர் எடுத்த முடிவுகள் அணிக்கு நல்ல ரிசல்டையும் கொடுத்தது. சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்த கோலி, ஒரு சிலரை அணிக்குள் வரவிடாமல் ஓரங்கட்டினார்.
கௌதம் கம்பீர்
விராட் கோலி ஓரங்கட்டியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பீர். தொடர்ச்சியான சொதப்பல்களுக்குப் பிறகு அப்போது தான் அணியில் மறுபிரவேசம் செய்திருந்தார். காம்பீருக்கு நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த தொடரில் ஒரு அரைசதம் அடித்த அவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற அடுத்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டார். விராட் கோலி கேப்டன் பொறுப்பு ஏற்றதும் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் காம்பீர் ஒரு போட்டியில் கூட இந்திய அணிக்காக விளையாடவில்லை.
மேலும் படிக்க | சுரேஷ் ரெய்னாவை பின்பற்றுகிறாரா திலக் வர்மா? ஒப்பீடும் பல ஆச்சரியங்களும்
அமித் மிஸ்ரா
அமித் மிஸ்ராவை பொறுத்தவரை இந்திய அணியில் நிலையான இடம் அவருக்கு எப்போதுமே கிடைக்கவில்லை. அதற்கு காரணம் இந்திய அணியில் கேப்டனாக இருந்தவர்கள் யாரும் அவருக்கு பக்கபலமாக இருக்கவில்லை. விராட் கோலியும் இந்த லிஸ்டில் இருக்கிறார். தோனி தலைமையிலான இந்திய அணியில் அவ்வப்போது விளையாடிய அமித் மிஸ்ரா, விராட் கோலி கேப்டனாக வந்தபிறகு முழுமையாக ஓரங்கட்டப்பட்டார். கோலி கேப்டனாக இருந்தபோது இரண்டு 20 ஓவர் போட்டிகள் மட்டுமே விளையாடினார். அதன்பிறகு எந்த வடிவத்திலும் விராட் கோலி அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
ரவிச்சந்திரன் அஸ்வின்
டெஸ்ட் போட்டிகளில் தவறாமல் இந்திய அணியில் இடம்பிடித்த ரவிச்ந்திரன் அஸ்வின், ஒயிட்பால் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஒரு சில போட்டிகளில் அவ்வப்போது மட்டுமே இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடினார் அஸ்வின். முக்கியமாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இதனால் சில காலம் அதிருப்திலேயே அஸ்வின் இருந்தார்.
மேலும் படிக்க | டீம் இண்டியாவை வீழ்த்தி ODI உலகக்கோப்பையை பாகிஸ்தான் வெல்லும்! பாக் வீரர் கணிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ