Rishabh Pant News Tamil : ரிஷப் பந்தின் இடம் இந்திய அணியில் கேள்விக்குறியாகியுள்ளது. தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதும் முதல் வேளையாக கே.எல்.ராகுலுக்கு இந்திய அணியில் இடம் கொடுத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் ராகுல், ரிஷப் பந்த் இருவருமே இடம்பிடித்திருந்தாலும் கம்பீர், கே.எல் ராகுலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது முதல் ஒருநாள் போட்டியிலேயே தெரிந்தது. ரிஷப் பந்த் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்த சூழலில் அவர் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இனி நிரந்தரமாக இடம் பிடிக்க வாய்ப்பே இல்லை. ரிஷப் பந்த் இடத்துக்கு இப்போது மூன்று வீரர்கள் போட்டியில் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கே.எல்.ராகுல்


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் மிடில் ஆர்டரிலும் சிறப்பாக ஆடக்கூடிய கேஎல் ராகுல், விக்கெட் கீப்பிங்கும் செய்வார். ஆனால் அவருக்கு கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்தது. ரோகித் சர்மாவின் சாய்ஸில் ரிஷப் பந்த் முதல் தேர்வாக இருந்ததால் ராகுல் இந்திய அணியில் இடம்பிடிப்பது என்பது மிகவும் சவாலாக இருந்தது. ஆனால் இப்போது சூழல் எல்லாம் மாறிவிட்டதால் ராகுலின் இடம் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் உறுதியாகியுள்ளது. 


மேலும் படிக்க | இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் புது அப்டேட் - சாம்பியன்ஸ் டிராபியில் 2 முறை மோதல்..!


சஞ்சு சாம்சன்


இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பவர். இவருக்கும் இதுவரை போட்டியாக இருந்தவர் ரிஷப் பந்த். 70க்கும் மேற்பட்ட போட்டிகளில் ரிஷப் பந்த் டி20 போட்டிகளில் ஆடியிருந்தாலும் சஞ்சு சாம்சனின் சராசரி, ஸ்டைக்ரேட்டே அதிகமாக இருக்கிறது. ஒருநாள் போட்டியில் சிறப்பாக ஆடும் சாம்சனுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் இதுவரை கொடுக்கப்படாமல் இருந்தது. இனி அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு தெரிகிறது.  


3. இஷான் கிஷன்


இஷான் கிஷன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோதே இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அவர், தனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை என கூறிவிட்டு இந்திய அணியில் இருந்து விலகினார். இப்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கும் இஷான் கிஷன் தொடர்ச்சியாக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக இரட்டை சதம் அடித்த பிளேயர்களில் இவரும் ஒருவர். இவர்களின் மூன்று பேரின் வருகையால் இந்திய அணியில் ரிஷப் பந்தின் இடம் இப்போது ஊசலாட்டத்தில் இருக்கிறது.  


மேலும் படிக்க | தோனி, விராட் வாய்ப்பு கொடுக்காததால் ஓய்வு பெற்ற 4 இந்திய கிரிக்கெட் வீரர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r