நியூசிலாந்து எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் மற்றும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.


5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ளது. அதில் கடந்த 23 ஆம் தேதி நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், கடந்த 26 ஆம் தேதி மவுண்ட் மன்கன்யில் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாது ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்திலும், கடந்த 28 ஆம் தேதி அதே மவுண்ட் மன்கன்யில் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதால் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி. இதனையடுத்து கடந்த 31 ஆம் தேதி ஹாமில்டன் செடான் பார்க்கில் நடைபெற்ற நான்காவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி வெற்றி பெற்றது.


இந்தநிலையில், இன்று கடைசி ஒருநாள் போட்டியான ஐந்தாவது ஆட்டம் வெலிங்டன் வெஸ்ட்பாக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நான்காவது போட்டியில் படுதோல்வியை தழுவியது. இதனால் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் வேண்டும் என்ற கட்டாயத்தில் ரோகித் சர்மா இருந்தார். 


அந்த வகையில் இன்றைய போட்டியில்  ‘டாஸ்’ வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து இந்திய விக்கெட்டுகள் சரிந்தன. 18 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது. இறுதியில் இந்தியா 49. 5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அம்பதிராயுடு 90, விஜய் சங்கரும் ஹர்திக் பாண்டியாவும் தலா 45 ரன்களை எடுத்தனர். 


பின்னர் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. கொலின் மன்ரோ 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய நிகோல்ஸ், 8 ரன்களிலும், கேன் வில்லியம்சன் 39 ரன்களும், டெய்லர் 1 ரன்களும், டாம் லதாம் 37 ரன்களும், கிராண்ட்ஹோம் 11 ரன்களும், நீஷம் 44 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 


இதன்மூலம் நியூசிலாந்து அணி 44.1 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 217 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்நிலையில் 5-வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை வென்றது இந்தியா.