வீட்டிற்கு பாதுகாப்பாக சிங்கம் வளர்க்கும் கிரிக்கெட் வீரர்!!

வீட்டிற்கு பாதுகாப்பாக நாய், பூனைக்கு பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடியோ வீட்டில் சிங்கம் வளர்த்து வருகிறார்!
வீட்டிற்கு பாதுகாப்பாக நாய், பூனைக்கு பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடியோ வீட்டில் சிங்கம் வளர்த்து வருகிறார்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த ஆல்ரவுண்டருமான ஷாகித் அஃப்ரிடி, இவர் தன்னுடைய வீட்டில் நாய், பூனைக்கு பதில் சிங்கத்தை வளர்த்து வருகிறார். இவர், பாகிஸ்தான் அணிக்காக தனது ஆட்டத்தை 1996-ல் தொடங்கிய அஃபிரிடி 2017ம் ஆண்டு வரை ஆடினார் என்பது குறிபிடத்தக்கது.
இவருக்கு, தற்போது அக்ஷா, ஆஜ்வா, ஆன்ஷா, அஸ்மாரா ஆகிய 4 மகள்கள் உள்ளனர். வீட்டில் ஒய்வு பெற்றிருக்கும் அஃப்ரிடியோ சமூக வலைதளங்களில் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில், இவர் தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில், அஃப்ரிடிவின் மகளுக்கு பின்னால் ஒரு சிங்கம் படுத்திருக்கிறது. இதனை கண்ட ரசிகர்கள் அஃப்ரிடி வீட்டில் சிங்கம் வளர்க்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றார்.