நியூசிலாந்து-க்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா...
நியூசிலாந்து A அணிக்கு எதிரான ஒருநாள் தொடரினை இந்தியா A அணி 2-1 என்ற கணக்கில் இழந்தது.
நியூசிலாந்து A அணிக்கு எதிரான ஒருநாள் தொடரினை இந்தியா A அணி 2-1 என்ற கணக்கில் இழந்தது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய A அணி மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைப்பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய A அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்த A அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக மார்க் சாம்ப் 110(98) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக டாட் அஸ்டெல் 56(65) ரன்கள் குவித்தார். இந்திய தரப்பில் இஷான் பொரேல் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரித்திவி ஷா 55(38) மற்றும் ருத்ரராஜ் 44(66) ரன்கள் குவித்து அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தனர். இவர்களை தொடர்ந்து வந்த இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 71(84) ரன்கள் குவித்தார். எனினும் இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற இந்திய A அணி ஆட்டத்தின் 49.4-வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்களில் சுருண்டது. இதனையடுத்து நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற முதல் இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலை கொண்டிருந்த அணிகள், இன்றை போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதை அடுத்து 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இதனயடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையே ஜனவரி 30 துவங்கி பிப்ரவரி 10 வரை டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.