டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்தியர் என்னும் பெருமையினை மிதாலி ராஜ் பெற்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ICC மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது மேற்கிந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றிப்பெற்று அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் 51 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். 


இது இவருடைய 17-வது அரை சதம் ஆகும். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 85 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலி ராஜ் 80 இன்னிங்ஸ் விளையாடி 2283 ரன்கள் குவித்துள்ளார்.


இந்த பட்டியலில் இவரைத் தொடர்ந்து ரோகித் ஷர்மா 87 போட்டிகளில் விளையாடி, 80 இன்னிங்ஸில் 2207 ரன்களுடனும், விராட் கோலி 62 போட்டிகளில் விளையாடி, 58 இன்னிங்ஸில் 2,102 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.