ரிஷப் பன்ட் வாய்ப்பு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியில் தோனி ஓய்வு பெற்ற பிறகு நிலையான விக்கெட் கீப்பர் என்ற இடம் ரிஷப் பன்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் என மூன்று வடிவங்களிலும் இந்திய அணிக்கான கீப்பராக அவர் செயல்பட்டு வருகிறார். பேட்டிங்கிலும் பினிஷர் ரோல் ரிஷப் பன்ட்டுக்கு செட்டாகும் என்றெல்லாம் கணிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவர் விளையாடும் போக்கை பார்க்கும்போது, அவர் மீது பிசிசிஐ அதீத நம்பிக்கை வைத்துவிட்டதுபோல் தெரிகிறது.


மேலும் படிக்க | உலகக்கோப்பையில் அசத்தும் ஆசிய அணிகள்! உலக இதயங்களை வென்ற ஜப்பான் ரசிகர்கள்


தொடரும் மோசமான ஆட்டம்


டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் அவரால், இந்திய அணிக்காக 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ரன்களை குவிக்க முடியவில்லை. இதுவரை ஒரு பெரிய இன்னிங்ஸ் கூட அவரிடம் இருந்து வரவில்லை. எதிர்பார்புகள் எல்லாம் ஏமாற்றமாக மாறிவிட்டதால், ரிஷப் பன்டுக்கு மாற்றாக சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷனை இந்திய அணியின் குறுகிய வடிவிலான, அதாவது ஒருநாள் மற்றும் 20 ஒவர் போட்டிகளில் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.



ஆகாஷ் சோப்ரா கணிப்பு


இந்திய அணியின் முன்னாள் வீரரான இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். அவர் ரிஷப் பன்ட் எதிர்காலம் குறித்து பேசும்போது, தோனிக்கு பிறகு இந்திய அணியின் சிறப்பான விக்கெட் கீப்பராக இருப்பார் என கணிக்கப்பட்ட ரிஷப் பன்ட் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இல்லை. டெஸ்ட் போட்டிகளில் அவர் தான் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன். இதேபோல் விளையாடிக் கொண்டிருந்தால் வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்குப் பிறகு இந்திய அணியின் டெஸ்ட் அணியை தவிர மற்ற அணிகளில் வாய்ப்பு கேள்விகுறியாகும் என தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | பாகிஸ்தான் அதிரடி! முடிவுக்கு வருகிறதா இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ