சர்வதேச சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி 21 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென ஸ்பான்சர் இல்லாததால் புனேவுக்கு மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் சென்னை நகருக்கே திரும்பியிருக்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இந்த முறை பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் போட்டியாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 12 ஆம் தேதியான இன்று முதல் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நுங்கம்பாக்கத்தில் இருக்கும் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகளுக்காக சர்வதேச 5 ஆடுகளங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்தமுறை நடைபெறும் சென்னை ஓபனில் உலக தரவரிசையில் 29-வது இடம் வகிக்கும் அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்கே பங்கேற்க இருக்கிறார். அவருடன் 72-ம் நிலை வீராங்கனை ரஷ்யாவைச் சேர்ந்த வர்வரா கிராசெவா, போலந்து நாட்டைச் சேர்ந்த மேக்டா லினெட், 2014-ம் ஆண்டு விம்பிள்டனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய கனடா வீராங்கனை யூஜெனி புசார்ட் , ஜெர்மனியைச் சேர்ந்த தாட்ஜனா மரியா, பெல்ஜியம் யானினா விக்மேயர், சீனாவின் குவாங் வாங்க், ஸ்வீடனின் ரெபக்கா பீட்டர்சன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


மேலும் படிக்க | உலக கோப்பைக்கான இந்திய அணி இதுதான்! வெளியான தகவல்!


இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்பதற்காக தகுதிச் சுற்று போட்டிகளில் பங்கேற்ற 5 இந்திய வீராங்கனைகளும் தோல்வியை தழுவினர். சாய் சம்ஹிதா, லட்சுமி பிரபா ஆகியோர் ஜப்பான் வீராங்கனைகளிடம் தோல்வியை தழுவினர். மற்றொரு இந்திய வீராங்கனையான ரியா பாட்டியா லித்துனியா வீராங்கனையிடம் தோல்வியை தழுவினார். ருதுராஜா போஷ்லே மற்றும் சவுஜினியா பவிசெட்டி ஆகிய இந்திய வீராங்கனைகளும் தகுதிச் சுற்று போட்டிகளில் தோல்வியை தழுவினர். 5 இந்திய வீராங்கனைகள் தகுதிச் சுற்றிலேயே வெளியேறியிருப்பது இந்திய ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஏடி சென்னை ஓபனில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது.


மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்த 3 வீரர்கள் நீக்கம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ