புது தில்லி: கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) ஏப்ரல் 15 க்கு ஒத்திவைக்கப்பட்ட பின்னர், எட்டு அணியின் உரிமையாளர்கள் தங்கள் லீக் போட்டிகளுக்கு முன்பாக அமைக்கப்படும் பயிற்ச்சி முகாம்களை (Training Camp) ரத்து செய்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் இருந்து அறிவிப்பு வரும்வரை, இந்த தடை தொடரும் எனவும் கூறப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் 21 ஆம் தேதி தொடங்கவிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் திங்களன்று தங்கள் பயிற்சி முகாமை ரத்து செய்தது. நான்கு முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians), சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) ஆகியவை ஏற்கனவே தங்கள் முகாம்களை ரத்து செய்துள்ளன.


"அனைவரின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் மனதில் வைத்து, மார்ச் 21 முதல் தொடங்க இருந்த ஆர்.சி.பி (Royal Challengers Bangalore) பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று ஆர்.சி.பி. உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் கூறியுள்ளார்.


 



மூன்று முறை சாம்பியனான சி.எஸ்.கே (CSK) சனிக்கிழமை தனது முகாமை ஒத்திவைத்தது. அதன் பிறகு மகேந்திர சிங் தோனி சென்னையிலிருந்து புறப்பட்டு வீடு திரும்பினர். 


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் 2020 தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதி பிசிசிஐ தள்ளி வைத்தது. ஏனென்றால் வெளிநாட்டு வீரர்கள் ஒரே நேரத்தில் இந்தியாவுக்கு வருவதை இந்திய அரசு தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பி.சி.சி.ஐ (BCCI) அலுவலகமும் மூடப்பட்டது, ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள்:


இது தவிர, கொரோனாவின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்துவதை தடை செய்ய மூன்று மாநிலங்களும் முடிவு செய்திருந்தன. ஏப்ரல் 15 க்குள் கொரோனாவில் நிலைமை சரியானால், IPL போட்டிகளை தடை செய்த மாநில அரசுகள் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒப்புதல் அளிக்கலாம் என்று ஐபிஎல் அமைப்பாளர்கள் மற்றும் குழு உரிமையாளர்கள் நம்புகின்றனர்.


இந்தியாவில் இதுவரை 114 பேருக்கு கொரோனா தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் இந்த நோயால் இந்தியாவில் இரண்டு பேர் இறந்துள்ளனர். உலகளவில், இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை 6000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160,000 க்கும் அதிகமாக உள்ளது.