இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளது பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவா அணிக்காக விளையாடி வரும் அர்ஜூன், ராஜஸ்தான் அணியுடனான தனது முதல் போட்டியில் நேற்று, 178 பந்துகளில் சதம் அடித்தார். இதேபோன்று, கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்னரும், ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர், குஜராத் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்திருந்தார். தந்தையை போன்று மகனும் அந்த சாதனையை படைத்துள்ள நிலையில், அவரை போன்ற இந்திய அணியில் சிறப்பான பங்களிப்பை அர்ஜூன் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆனால், தந்தை போன்று இல்லாமல், இடதுகை வீரரான அர்ஜூன் டெண்டுல்கர் நீண்ட காலமாக சிறப்பான ஒரு ஆட்டத்திற்காக காத்திருந்தார். கடந்த முறை மும்பை அணியில் இருந்த அர்ஜூன், ஒரு போட்டியை கூட விளையாடாததால், அருகாமை மாநிலமான கோவாவாக்காக இந்தாண்டு களமிறங்கியிருந்தார். 


மேலும் படிக்க | ஒரே போட்டியில் இப்படி ஒரு சாதனையா? இந்திய வீரரின் அதிரடி!


இந்நிலையில், அவரின் இந்த சாதனை மிகுந்த சதம் குறித்து சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்துள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தின் 40 ஆண்டுகால விழாவில் பேசிய சச்சின்,"யாரும் என்னிடம் கேட்காத கடினமான கேள்வி. ஒரு தந்தையாக, என் தந்தை யாரிடமோ சொன்னதை நான் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது - இது நான் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கியபோது, யாரோ அவரை ‘இவர் சச்சினின் தந்தை’ என்று அறிமுகப்படுத்தினர். 


அப்போது என் தந்தையின் நண்பர் அவரிடம் எப்படி உணர்கிறார் என்று கேட்டார். இது என் வாழ்வின் பெருமையான தருணம், ஏனென்றால் தந்தைகள் இப்படித்தான் இருக்க விரும்புகிறார்கள் - உங்கள் குழந்தை செய்ததைக் கண்டு, தாங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்றார். 


மேலும் பேசிய அவர்,"அர்ஜுன் சாதாரண குழந்தைப் பருவத்தை அனுபவிக்கவில்லை. கிரிக்கெட் வீரரின் மகனாக இருந்து விலகி சில காலம் இருந்ததால், அது அவ்வளவு எளிதல்ல. அதனால்தான் நான் ஓய்வு பெற்றபோது, மும்பையில் மீடியாக்களால் எனக்கு வசதியாக இருந்தது.


அவர்களுக்கு எனது செய்தி: அர்ஜுன் கிரிக்கெட்டை காதலிக்க அனுமதியுங்கள், அவருக்கு அந்த வாய்ப்பை கொடுங்கள். அவர் நிகழ்த்திய பிறகு பல்வேறு உங்கள் செய்திகளை நீங்கள் கொடுக்கலாம். அவருக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள்.


ஏனென்றால் என் பெற்றோரிடமிருந்து எனக்கு ஒருபோதும் அழுத்தம் வந்ததில்லை. என் பெற்றோர் எனக்கு வெளியே சென்று என்னை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுத்தனர். எதிர்பார்ப்புகளின் அழுத்தம் இல்லை. அது ஊக்கமும் ஆதரவும் மட்டுமே, நாம் எப்படிச் சென்று நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும். அதைத்தான் நான் அவர் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். சவாலாக இருக்கும் என்று அவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன்" என்றார். 


ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அர்ஜுன், இம்முறை தனது அறிமுக போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | IPL Mini Auction : ஐபிஎல் ஏலத்தில் கிறிஸ் கெயில்... நாயகன் மீண்டும் வரார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ