Chris Gayle in IPL Auction 2022 : 15ஆவது ஐபிஎல் சீசன் அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் பல நகரங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. வழக்கமாக மூன்று சீசன்களுக்கு ஒருமுறை மெகா ஏலம், ஒவ்வொரு சீசனுக்கு இடையில் மினி ஏலமும் நடைபெறும்.
கடந்த சீசனையொட்டி, மெகா ஏலம் நடத்தப்பட்ட நிலையில், அடுத்த சீசனுக்காக தற்போது மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலம் வரும் டிச. 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற இருக்கிறது. கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
வரும் மினி ஏலத்தில் மொத்தம் 991 பேர் பங்கேற்கின்றனர். அதில், 714 இந்திய வீரர்களும், 277 வெளிநாட்டு வீரர்களும் அடக்கம். ஆனால், 405 வீரர்களின் பெயர்கள் மட்டுமே வரும் டிச. 23ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மினி ஏலத்தை முன்னிட்டு 10இல் இருந்து 16 வீரர்கள் வரை ஐபிஎல் அணிகள் தக்கவைத்தன. தொடர்ந்து, மற்ற வீரர்களை விடுவித்தன.
மேலும் படிக்க | ஒரே போட்டியில் இப்படி ஒரு சாதனையா? இந்திய வீரரின் அதிரடி!
இந்த ஐபிஎல் ஏலத்தில் ஆல்ரவுண்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு வீரர்கள். பிராவோ, பொல்லார்ட் போன்றோர் ஓய்வு அறிவித்த நிலையில், பாட் கம்மின்ஸ் போன்றோர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதை அடுத்தும் வெளிநாட்டு வீரர்களை அனைத்து அணிகளும் வட்டம்போட்டு வருகின்றன.
இதில், சமீபத்தில் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி கோப்பை வெல்ல சிறப்பான பங்களிப்பை அளித்த சாம் கரன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் கேம்ரூன் கிரீன், அனுபவ வீரர் ஷகிப் அல்-ஹாசன் ஆகியோர் மினி-ஏலத்தில் அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் வீரர்களாக உள்ளனர்.
அந்த வகையில், அதிரடி வீரரான கிறிஸ் கெயிலும் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக ஜியோ சினிமா தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஜியோ சினிமாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், ஐபிஎல்லில் கிறிஸ் கெயில் மீண்டும் வருகிறார் என குறிப்பிட்டுள்ளது. ஆனால், ஐபிஎல் நிர்வாகம் ஏலத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள 405 வீரர்களின் பட்டியலில் கிறிஸ் கெயில் இடம்பெறவில்லை.
The is coming to #TataIPL
TUNE IN to #JioCinema on Dec 23 & witness all the drama from #IPL2023Auction#TataIPLonJioCinema | @IPL pic.twitter.com/YDqPKj4uxH
— JioCinema (@JioCinema) December 15, 2022
எனவே, அவர் ஏல நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க வாய்ப்புள்ளது என தெரிகிறது. ஐபிஎல் தொடரின் ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை (இந்தியாவில்) வியாகாம் 18 நிறுவனம் பெற்றிருந்தது. அதன்மூலம், ஜியோ சினிமா ஆப்பில் ஏலம், போட்டிகள் அனைத்தும் ஒளிப்பரப்பப்பட வாய்ப்புள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஏலம் குறித்த நிகழ்ச்சிகளில் கிறிஸ் கெயில் பங்குபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி பேட்டரான கெய்ல், ஐபிஎல் தொடரின் ஜாம்பவான் என்ற அழைக்கலாம். அவர் ஐபிஎல் தொடரில் 3 அணிகளுக்காக விளையாடி உள்ளார். தொடக்க காலங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக விளையாடிய அவர், 3 சீசன்களுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (RCB) அணிக்கு மாற்றினார். அவர் தனது கடைசி 2 சீசன்களில் (2020, 2021) பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
கெயில் 142 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4965 ரன்களை அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ரன் 175. ஐபிஎல் வரலாற்றில் இதுவே ஒரு போட்டியில் தனிநபரின் அதிகபட்ச ரன்னாகும். கெயில் ஐபிஎல் தொடரில், 405 பவுண்டரிகள் மற்றும் 357 சிக்சர்களை விளாசியுள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு டி20 தொடர்களில் பங்கேற்று வரும் கெயில், இந்தாண்டு ஏலத்தில் தனது பெயரை கொடுக்கவில்லை. கடந்த சீசனை முன்னிட்டு நடத்தப்பட்ட மெகா ஏலத்திலும் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கேன் வில்லியம்சன் எடுத்த திடீர் முடிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ