ஆஸ்திரேலியாவின் அலிஸா ஹீலி (Alyssa Healy) ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் (MS Dhoni) சாதனையை முறியடித்தார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான T-20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை விழச் செய்த விக்கெட் கீப்பர் (Wicket-Keeper) என்ற பெருமையைப் பெற்றார் அவர். 30 வயதான அலிஸா, ஆலன் பார்டர் பீல்டில், நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது T-20 போட்டியின் போது இந்த சாதனையை நிகழ்த்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹீலி தற்போது 99 T-20 போட்டிகளில் 92 பேட்ஸ்மென்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். தோனி 97 இன்னிங்ஸ்களில் 91 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். 39 வயதான தோனிக்குப் பின்னால், இங்கிலாந்தின் சாரா டெய்லர் உள்ளார். அவர் பெயரில் 74 டிஸ்மிசல்கள் உள்ளன. ரகேல் ப்ரீஸ்ட் (72) அடுத்த இடத்திலும், மெரிசா அகுலேரா (70) அதற்கு அடுத்த இடத்திலும் உள்ளனர்.


ALSO READ: IPL 2020: சின்ன தல Suresh Raina திரும்ப வராரா இல்லையா? என்னதான் சொல்றாங்க CSK?


இந்த பட்டியலில் தேனேஷ் ராம்தின் 63 டிஸ்மிசல்களுடனும் முஷ்பிகுர் ரஹீம் 61 டிஸ்மிசல்களுடனும் அடுத்த நிலையில் உள்ளனர்.


ஒட்டுமொத்தமாக, தென்னாப்பிரிக்காவின் மார்க் பௌச்சர் (Mark Boucher) சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் அதிக பேட்ஸ்மங்களின் விக்கெட்டுகளை எடுத்த விக்கெட் கீப்பராக உள்ளார். பௌச்சர் 15 ஆண்டுகளில் 467 சர்வதேச விளையாட்டுகளில் 998 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஆடம் கில்கிறிஸ்ட் (396 ஆட்டங்களில் 905), தோனி (538 போட்டிகளில் 829) ஆகியோர் உள்ளனர்.


350 ஒருநாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 98 T-20 போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய பின்னர் தோனி கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கேப்டனாக அதிகமான சர்வதேச போட்டிகளில் (332) ஆடிய சாதனை அவரிடம் உள்ளது. விக்கெட்டுக்கு பின்னால் அவரைப் போல் விரைவாக செயல்படுபவரைப் பார்க்க முடியாது. சர்வதேச போட்டிகளில் மிக அதிகமாக 195 ஸ்டம்பிங்குகளை செய்து தோனி சாதனை செய்துள்ளார். 


ALSO READ: IPL 2020: ஐபிஎல்லில் போட்டிக்கு மீண்டும் திரும்புகிறாரா சுரேஷ் ரெய்னா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR