Wimbeldon Final 2023: ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன் தொடர்களை அடுத்து இந்த ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் கடந்த ஜூலை 5ஆம் தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி நேற்று (ஜூலை 16) புகழ்பெற்ற சென்டர் கோர்டில் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடப்பு சாம்பியன் ஜோகோவிக்... 


இதில், தரவரிசையில் 2வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிக் (36), உலகின் முதல் நிலை வீரராக உள்ள ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்காரஸ் (20) உடன் பலப்பரீட்சை நடத்தினார். குறிப்பாக, ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன் என அடுத்தடுத்து இந்த சீசனின் இரண்டு கிராண்ட்ஸ்லாமை வென்ற ஜோகோவிக் விம்பிள்டனை தக்கவைக்கும் முனைப்பில் இருந்தார். மேலும், நடப்பு சாம்பியனான அவர் இதுவரை விம்பிள்டன் பட்டத்தை 7 முறை கைப்பற்றியிருக்கிறார். 


வழக்கத்திற்கு மாறாக...


அந்த வகையில், வழக்கத்திற்கு மாறாக (!) ஜோகோவிக் முதல் செட்டை 1-6 என்ற புள்ளிக்கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். ஆனால், அடுத்த செட்டில் அல்காரஸ் கடும் போட்டியை அளித்து 7-6(6) என்ற கணக்கில் இரண்டாவது செட்டை வென்றார். தொடர்ந்து, மூன்றாவது செட்டிலும் ஆதிக்கத்தை தொடர்ந்து அல்காரஸ் 6-1 என்ற கணக்கில் வென்று முன்னிலையை பெற்றார். 


மேலும் படிக்க | விளையாடறவங்கள விட எங்களுக்குத் தான் ஹார்ட் பீட் எகிறுது! பாசத்தில் அழும் உடன்பிறப்புகள்


பீனிக்ஸ் பறவையே தான்...


இன்னும், ஒரு செட்டை வென்றால் போதும் என்ற நிலைமையில் அல்காரஸ் இருக்க, வழக்கம்போல் பீனிக்ஸ் பறவையாய் ஜோகோவிக் மிரட்டலான கம்பேக்கை கொடுத்தார். அந்த நான்காவது செட்டை ஜோகோவிக் 6-3 என்ற கணக்கில் வென்று போட்டியை சுவராஸ்யமாக்கினார். போட்டி வெற்றியை தீர்மானிக்கும் 5ஆவது செட்டுக்கு வந்தது.


சாதனை படைத்த அல்காரஸ்


இதிலும், ஜோகோவிக் - அல்காரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. ஜோகோவிக் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்தாலும், அல்காரஸின் வீடாமுயற்சியின் பலனாக 6-4 என்ற கணக்கில் செட்டை வென்று அல்காரஸ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பையை உறுதிசெய்தார். இதன்மூலம், 3-2 என்ற செட் கணக்கில் அல்காரஸ், நடப்பு சாம்பியன் ஜோகோவிக்கை வீழ்த்தி விம்பிள்டனை வென்றார். 



மேலும், தொடர்ந்து 34 போட்டிகளாக தோல்வியே காணாமல் வந்த ஜோகோவிக்கின் வெற்றி பயணத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அதுமட்டுமின்றி, ஓபன் எராவில் (Open Era) 21 வயதிற்கு முன் கிராண்ட்ஸ்லாமை வென்ற 5ஆவது வீரர் என்ற பெருமையையும் அல்காரஸ் பெற்றார். 


இந்த சீசனிலும் சாதனை மிஸ்


மேலும், 2021 சீசனில் ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், விம்பிள்டன் என மூன்று கிராண்ட்ஸ்லாமை தொடர்ந்து வென்று அமெரிக்க ஓபனில் மெட்வடேவ்விடம் ஜோகோவிக் தோல்வியை தழுவி ஒரே சீசனில் நான்கு கிராண்ட்ஸ்லாம் என்ற சாதனை தவறிவிட்டிருந்தார். கடந்த சீசனில் தடுப்பூசி சர்ச்சையால் அதனை தவறவிட்ட அவர் இம்முறை நிச்சயம் எட்டிவிடுவார் என டென்னிஸ் உலகமே எதிர்பார்த்தது. 



4 மணிநேரம் 42 நிமிடங்கள்


சென்டர் கோர்டில் ஜோகோவிக்கை விட அல்காரஸிற்கு அதிக ஆதரவு நிலவிய போதிலும், தொடர்ந்து ஜோகோவிக் அசத்தலாகவே விளையாடினார். இருப்பினும், இம்முறையும் தோல்வியை தழுவி, அந்த சாதனையை அடுத்த சீசனுக்கு தள்ளிவைத்துள்ளார், ஜோகோவிக். அதுமட்டுமின்றி, 8 முறை விம்பிள்டனை வென்ற ஃபெடரரின் சாதனையை ஜோகோவிக் சமன் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. இருவரும் உயிரை கொடுத்து, 4 மணிநேரம் 42 நிமிடங்கள் வரை இந்த இறுதிப்போட்டியை விளையாடினர். 



ஜோகோவிக் குறித்து அல்காரஸ்


மேலும், கோப்பை வென்ற பின் அல்காரஸ், ஜோகோவிக் குறித்து கூறியதாவது,"ஜோகோவிக்கிற்கு எதிராக விளையாடியது எப்படி கூறுவது, அவர் ஒரு ஆகச்சிறந்த வீரர். என்னால் நம்பவே முடியவில்லை. நான் உங்களை கண்டு வியந்திருக்கிறேன். நான் டென்னிஸை உங்களை பார்த்து தான் விளையாட தொடங்கினேன். நான் பிறந்தபோதே நீங்கள் தொடர்களை வெல்ல தொடங்கிவிட்டீர்கள்" என கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, பிரஞ்சு ஓபன் அரையிறுதியில் ஜோகோவிக் 3-1 என்ற கணக்கில் அல்காரஸை வென்றது இங்கு நினைவுக்கூரத்தக்கது. 



மேலும் படிக்க | Wimbledon: விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டம் வென்றார் மார்கெட்டா வொன்ட்ரூசோவா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ