கேப்டனாக விராட் கோலியின் மற்றொரு சாதனை!
ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இருந்து அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.
இந்தியாவில் 2008ம் ஆண்டில் இருந்து ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டிகளில் வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்கின்றனர். ஐபிஎல் நடைபெற்று வரும் 13 வருடத்தில் சிஸ்கே அணியின் கேப்டன் தோனி மட்டுமே ஒரு அணிக்காக அதிக போட்டிகளில் கேப்டனாக ஆடிய வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளார். 203 போட்டிகளில் கேப்டனாக ஆடிய தோனி 120 வெற்றிகளும் 82 முறை தோல்வியும் தழுவு உள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக இருந்து அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட்கோலி முதல் இடத்தில் உள்ளார். 2011ம் ஆண்டு ராயல் சேலஞ்சு அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற கோலி இதுவரை 140 போட்டிகளில் விளையாடி உள்ளார். 139 ஆட்டங்களில் சுமார் 4881 ரன்களை குவித்து முதல் இடத்தில் உள்ளார். 133 ஸ்ட்ரைக் ரேட்டில் 43 ஆவரேஜ் ஸ்கோரில் அதிக பட்சமாக 113 ரன்கள் அடித்துள்ளார். ஆர்சிபியின் கேப்டனாக ஒவ்வொரு வருவத்திலும் 300+ ரன்களை அடித்துள்ளார்.
கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர்களில் தோனி இரண்டாம் இடத்தில் உள்ளார். 203 போட்டிகள் விளையாடி உள்ள தோனி 4456 ரன்கள் குவித்துள்ளார். சமீப ஆண்டுகளாக சரியாக விளையாடாமல் இருந்து வருகிறார் தோனி. இருப்பினும் 40 ஆவரேஜ் உடன் 2ம் இடத்தில் இருக்கிறார்.
3518 ரங்களுடன் கவுதம் கம்பீர் 3வது இடத்திலும், 3406 ரங்களுடன் ரோஹித் சர்மா நான்காம் இடத்திலும், 2840 ரங்களுடன் டேவிட் வார்னர் 5வது இடத்திலும் உள்ளனர். இந்த ஆண்டு முதல் விராட் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
ASLO READ உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும். கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள். Android Link: https://bit.ly/3hDyh4G Apple Link: https://apple.co/3loQYeR