CSK vs RCB: ஆர்சிபி மானத்தை காப்பற்றிய அனுஜ் ராவத் - சிஎஸ்கேவுக்கு 174 ரன்கள் இலக்கு!
CSK vs RCB Highlights: 17ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 170 ரன்களை குவித்தது.
CSK vs RCB Highlights: 17ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்தித்தது. மகேந்திர சிங் தோனி கேப்டன்ஸியில் இருந்து விலகிய நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கேவின் கேப்டனாக செயல்பட்டார். டாஸை வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாப் டூ பிளெசிஸ முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சிஎஸ்கே அணி ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், மகேஷ் தீக்ஷனா, முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகிய வெளிநாட்டு வீரர்களுடன், ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேம்ரூன் கிரீன், அல்ஸாரி ஜோசப் ஆகியோருடன் களமிறங்கியது. ஆர்சிபி அணிக்கு விராட் கோலி - டூ பிளெசிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
பவர் பிளேவில் 3 விக்கெட்டுகள்
முதல் நான்கு ஓவர்களிலேயே 37 ரன்களை குவித்த நிலையில், ஐந்தாவது ஓவரில் ஆர்சிபி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்த நிலையில் டூ பிளெசிஸ் 35 ரன்களுக்கும், ரஜத் பட்டிதார் ரன் ஏதும் இன்றியும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். தீபக் சஹாரின் அடுத்த ஓவரில் மேக்ஸ்வெல் டக் அவுட்டானார். இதனால் பவர் பிளேவில் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
மேலும் படிக்க | MS Dhoni: தலைவன்னா இவர் தான்! பெட்டியை தூக்கிச் செல்லும் தல தோனியின் வீடியோ வைரல்!
விராட் கோலி மற்றும் கேம்ரூன் கிரீன் அடுத்த 5 ஓவர்கள் தாக்குபிடித்த நிலையில், முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய 12ஆவது ஓவரில் விராட் கோலி 21 ரன்களிலும், முஸ்தபிசுர் 18 ரன்களிலும் ஆட்டமிழக்கச் செய்தார். அப்போது 78 ரன்களுக்கு ஆர்சிபி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது அனுஜ் ராவத் - தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்து கடைசி பந்து வரை விக்கெட்டை விடாமல் இருந்தனர். இந்த ஜோடி 5ஆவது விக்கெட்டுக்கு 95 ரன்களை குவித்தது.
174 ரன்கள் இலக்கு
ஆர்சிபி 20 ஓவர்களில் 173 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. அனுஜ் ராவத் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 48 ரன்களை எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட்டானார். தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடித்து 38 ரன்களை எடுத்தார். சிஎஸ்கே பந்துவீச்சில் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
174 ரன்கள் என்ற இலக்குடன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா பேட்டிங் இறங்கியுள்ளனர். ஆர்சிபியின் தினேஷ் கார்த்திக் வெளியேறி Impact Sub ஆக வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாள் களமிறங்கினார்.
முன்னதாக முதல் போட்டி என்பதால் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குழுவினர், பாடகர் சோனு நிகாம், பாலிவுட் நடிகர்கள் அக்சய் குமார், டைகர் செஷராஃப் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்கும் முன் DJ Axwell-இன் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ