IPL சூதாட்ட புகாரில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான், சூதாட்டம் நடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானி, சமீபத்தில் சிறை சென்று தற்போது ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில் தற்போது அவரது தம்பி அர்பாஸ் கான் IPL சூதாட்ட புகாரில் சிக்கியுள்ளார். சூதாடிய தொகை ரூ.2.8 கோடியை திருப்பி அளிக்காததால் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட கும்பல் அவரை மிரட்டியதும் உறுதியாகியுள்ளது.


IPL தொடரின் 11-வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் நடந்த முடிந்தன. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.


பரபரப்பாக சென்ற இத்தொடரின் போட்டிகளின் மீது சூதாட்டம் நடத்தியதாக தற்போது மீண்டும் புகார் எழுந்துள்ளது. பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இந்த சூதாட்ட புகார் தொடர்பாக கடந்த மே 15-ஆம் நாள் சூதாட்ட கும்பலைச் சேர்ந்த 5 பேரை மகாராஷ்டிர மாநிலம் தானே காவல்துறையினர் கைது செய்தனர். 


இந்த கும்பளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஆண்டு நடந்த IPL தொடர் போட்டிகளின் போது சுமார் 100 கோடிக்கு மேல் சூதாட்டம் நடந்திருப்பது அம்பளமானது. இந்த சூதாட்டத்தில் வெளிநாட்டில் உள்ள பலருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும் இந்த கும்பலுடன் நடிகர் சல்மானின் தம்பி, நடிகர் அர்பாஸ் கானுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.


இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அர்பாஸ் கானுக்கு மகாராஷ்டிர போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதை தொடர்ந்து இன்று அர்பாஸ் கான் தானே காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார். பின்னர் காவல்துறையினர் அவரிடம் நேருக்கு நேர் விசாரணை நடத்தினர்.


விசாரணையின்போது, 6 ஆண்டுகளாக IPL சூதாட்டத்தில் ஈடுபட்டதை நடிகர் அர்பாஸ் கான் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சூதாட்டத்தினால் கிட்டத்தட்ட ரூ. 2.80 கோடி ரூபாய் தொகையை தோற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த தொகையை இதுவரை அவர் செலுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.