FIFA World Cup Final 2022: 347 கோடி ரூபாய் பரிசுத் தொகை யாருக்கு? வெற்றி நாயகன் மெஸ்ஸி?
Argentina vs France World Cup Final: லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் FIFA உலகக் கோப்பையுடன், 347 கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன் நாடு திரும்பும்
FIFA World Cup Final 2022: அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 347 கோடி ரூபாய் பரிசுத் தொகைகிடைக்கும். லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் FIFA உலகக் கோப்பையுடன், கத்தார் வழங்கும் 347 கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன் நாடு திரும்பலாம்,
லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா, கோப்பையை கைப்பற்றும் கனவில் களம் இறங்குகிறது. இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவுக்காக தனது கடைசி ஆட்டத்தில் விளையாடும் மெஸ்சிக்கு இந்தப் போட்டி கூடுதல் சிறப்பானதாக இருக்கும். மெஸ்ஸி அர்ஜென்டினாவுடன் இணைந்து உலகக் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தகது.
பட்டத்தை வெல்வதற்கான அவரது கடைசி முயற்சி இதுவாகும், 2014 இல் வேதனையுடன் நெருங்கி வந்தார், 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல முடியாத வருத்தத்தில் இருக்கும் மெஸ்ஸி, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அர்ஜென்டினாவும் இணைந்து மீண்டும் வரலாற்றை எழுதுவாரா?
மேலும் படிக்க | FIFA World Cup Final 2022: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி
அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள், கத்தார் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் மோதும் நிலையில் கோப்பையை வெல்லும் அணிக்கு மிகப் பெரிய பரிசுத் தொகை காத்துக் கொண்டிருக்கிறது.
FIFA உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர் $42 மில்லியன் பரிசுத் தொகையைப் பெறுவார், இதன் இந்திய மதிப்பு ரூ.347 கோடி ஆகும். இரண்டாம் இடம் பெறும் அணிக்கு $30 மில்லியன், அதாவது ரூ.248 கோடி கிடைக்கும்.
சனிக்கிழமை இரவு 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோவைத் தொடர்ந்து இப்போது மூன்றாவது இடத்தில் இருக்கும் குரோஷியா அணிக்கு $27 மில்லியன் (ரூ. 2.39 பில்லியன்) வழங்கப்படுகிறது, நான்காவது இடத்தில் இருக்கும் அணி $25 மில்லியன் (ரூ. 2.06 பில்லியன்) வெல்கிறது.
அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் வீரர்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட களம் இறங்கும்போது அவர்களின் மனதில் ரொக்கப்பரிசு எவ்வளவு என்ற எண்ணத்தை விட வெற்றி பெறும் வெறியே மேலோங்கி இருக்கும்.
ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில், அர்ஜென்டீனா - பிரான்ஸ் அணிகள் கோப்பைக்காக மோத உள்ளன. இரு அணிகளும் இதுவரை தலா இரண்டு முறை ஃபிபா உலகக்கோப்பையை வென்றுள்ள நிலையில், மூன்றாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் இறுதிப்போட்டியில் களம் காண்கின்றன.
1978, 1986 ஆகிய தொடர்களில் அர்ஜென்டீனா அணி கோப்பையை வென்றது. நடப்பு சாம்பியனான பிரான்ஸ், 2018, 1998ஆம் ஆண்டுகளில் ஃபீபா கோப்பையை கைப்பற்றியிருந்தது. அர்ஜென்டீனாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை தொடராக இருக்குக்ம் இன்றைய போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும். ‘
மேலும் படிக்க | குரோஷியாவுக்கு 3ஆவது இடம்... மனங்களை வென்ற மொராக்கோ - Goodbye Modric
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ