கன்னியாகுமரி: உலக கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி மெசியின் அரஜென்டின அணியின் வெற்றியை உற்சாகத்துடன் கொண்டாடிய குமரி மீனவ கிராம ரசிகர்களின் மகிழ்ச்சி கரைபுரண்டது. கால்பந்து விளையாட்டை சுவாசிக்கும் குமரி மாவட்டம் தூத்தூர் , சின்னதுறை, இரையுமன்துறை, மார்த்தாண்டன் துறை உட்பட மீனவ கிராமங்களில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய LED திரைகள் அமைத்து அர்ஜன்டீனா - குரேஷியா உலக கோப்பை அரையிறுதி போட்டியை காண உற்சாக கொண்டாட்டங்களுடன் அர்ஜன்டீனா ரசிகர்கள்...மாலை முதல் காத்திருந்தனர்.
ஃபீபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி துவக்க விழாவிற்கு முன்னதாகவே இங்குள்ள கால்பந்து விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் தங்களது கிராமங்களில் தங்களுக்கு பிடித்தமான நெய்மர், ரொனால்டோ, மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்களின் பிரமாண்ட கட் அவுட்டுகள் வைத்து தோரணங்கள் கட்டி அலங்கரித்திருந்தனர்.
உலக கோப்பை போட்டியை வரவேற்க விழாக் கோலம் பூண்ட இந்த கிராம மக்களின் கால்பந்து விளையாட்டின் மீதுள்ள ஆர்வம் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்து வந்தது. இந்நிலையில் தங்களுக்கு பிரியமான வீரர்களான நெய்மர், ரொனால்டோ போன்ற வீரர்களின் அணிகள் அரையிருதிக்குள் நுழையாமல் வெளியேறியது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த ஃபீபா கால்பந்துப் போட்டிகளில், நேற்று நடைபெற்ற போட்டியில், லியோனல் மெஸ்ஸியின் அணி, அர்ஜெண்டினா வெற்றி பெறவேண்டும் என அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.
மெஸ்ஸி உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைப்பார் என்ற ஆர்வம்த்துடன் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதனால், நேற்று நள்ளிரவு முதல் கிராமங்களில் அங்காங்கே 10 க்கும் மேற்பட்ட இடங்களில் பிரமாண்ட LED திரைகள் அமைத்து கோலாகலமாக கொண்டாடி போட்டியை கண்டு களித்தனர்.
மேலும் படிக்க | Google Search in 2022: கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப்-10 விளையாட்டு நிகழ்வுகள் பட்டியல்
இப்பகுதி மெஸ்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அர்ஜன்டீனா அணி தொடக்கம் முதலே ஆக்கிரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் கோலை மெஸ்ஸியே அடித்தது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டங்களைக் கொண்டுவந்தது.
தொடர்ந்து முதல் பகுதியில் 2 கோல்கள் பெற்று முன்னிலை வகித்த அர்ஜெண்டீனா அணி, இரண்டாம் பகுதியிலும் கோல் அடித்து 3 -0 என்ற கணக்கில் குரேஷியா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனை தொடர்ந்து இந்த கிராமங்களில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ