கபில்தேவிடம் இருந்து அர்ஷ்தீப்சிங் இதை கத்துக்கணும்; சொல்லும் முன்னாள் வீரர்
இந்திய அணியின் இளம் வீரரான அர்ஷ்தீப் சிங் கபில்தேவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது.
இலங்கை அணிக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியில் அர்தீப் சிங் 5 நோபால்களை வீசி கடுப்பேற்றினார். 20 ஓவர் போட்டியில் அதிக நோபால்களை வீசிய இந்திய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையும் அவர் வசம் வந்துள்ளது. அவர் மட்டும் துல்லியமாக பந்துவீசியிருந்தால் இலங்கை அணியின் ஸ்கோர் நிச்சயம் 200 ரன்களை கடந்திருக்காது. பேட்டிங்கின்போது இந்தியா எளிமையாக ஈஸியாக சேஸ் செய்திருக்கும். ஆனால், அப்படி நடக்காததற்கு அர்ஷ்தீப் சிங் மட்டுமே காரணம் எனக் கூறி ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியா அதிருப்தி
போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், நோபால் வீசுவது கொலை குற்றத்துக்கு சமமானது என காட்டமாக பேசினார். ஒரு பிளேயருக்கு அன்றைய நாள் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவும் அமையலாம். ஆனால், வரைமுறைக்குள் செயல்படுவதில் இருந்து நீங்கள் எப்போதும் விலகிச் செல்லக்கூடாது. நோபால் வீசுவது என்பது அப்படியானது அல்ல. ஹர்ஷ்தீப் மட்டுமல்ல, எந்த ஒரு பிளேயரும் நோபால் வீசுவது என்பதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். நல்ல பந்துவீசினாலும் பேட்ஸ்மேன்கள் அடிப்பது என்பது வேறு... நோபால் வீசுவது என்பது வேறு என தெரிவித்துள்ளார். ஏற்கனவே பலமுறை நோபால்களை வீசியிருக்கும் அர்ஷ்தீப் தவறுகளில் இருந்து நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
சுனில் கவாஸ்கர் விமர்சனம்
இதேபோல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் 5 நோபால்களை வீசிய அர்ஷ்தீப் சிங்கை சாடியுள்ளார். இளம் பந்துவீச்சாளராக இருந்தாலும், இந்திய அணிக்காக விளையாடும்போது நோபால் வீசுவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் இதனை நிச்சயம் கவனத்தில் கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் திருத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ராகுல் டிராவிட் ஆதரவு
இலங்கை அணிக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து பேசிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அணியில் இருக்கும் பெரும்பாலான பந்துவீச்சாளர்கள் இளம் வீரர்கள். அவர்கள் நிச்சயம் தவறுக செய்வார்கள். அதற்காக அவர்களை விமர்சிப்பது சரியாக இருக்காது. இது குறித்து கவனம் செலுத்தி அவர்களுக்கு அந்த தவறு மீண்டும் நடக்காதவாறு பயிற்சி கொடுப்போம் எனக் கூறியுள்ளார்.
கபில்தேவை பின்பற்றுங்கள்
கபில்தேவ் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு நோபால் கூட வீசாதது சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று உலகக்கோப்பையை வென்று கொடுத்த அவர்,225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 253 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது தவிர, 131 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக மொத்தம் 434 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் ஒருமுறை கூட அவர் நோபால் வீசியதில்லை. இதனை அவரிடம் இருந்து அர்ஷ்தீப் சிங் கற்றுக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ