Ashes Viral: ஸ்டம்பை ’இரும்பில்’ செஞ்சிருப்பாங்களோ?
ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியில் 134 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து ஸ்டம்ப் மீது மோதியும், பெயில்ஸ் கீழே விழாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. 3வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடர்ந்தது. கேம்ரூன் கிரீன் வீசிய ஒரு ஓவரில் பென்ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்தார். அந்த ஓவரில், பென் ஸ்டோக்ஸூக்கு எல்.பி.டபள்யூ கேட்டு ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் செய்ய, ஆன் ஃபீல்டு அம்ப்யர் அவுட் கொடுத்தார். ஆனால், பென் ஸ்டோக்ஸ் நொடிப் பொழுதில் அதனை எதிர்த்து அப்பீல் செய்தார்.
ALSO READ | அனுஷ்கா ஷர்மாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள் - காரணம் இதுதான்!
டிவி ரிப்ளேவில் அது எல்.பி.டபள்யூ இல்லை எனத் தெரிந்தது. ஆனால், 134 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்பட்ட அந்த பந்து ஆப் ஸ்டம்ப் மீது மோதிவிட்டு சென்றது தெரிந்தது. இதனைப் பார்த்த ஆஸ்திரேலிய வீரர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். களத்தில் இருந்த பென்ஸ்டோக்ஸ் கூட, ரிப்ளேவை பார்த்து சிரித்தார். பின்னர், ஆன்பீல்டு அம்பயரின் ஆவுட் ரிப்பீல் செய்யப்பட்டு, அவர் தொடர்ந்து விளையாடினார்.
134 கிலோ மீட்டரில் வீசப்பட்டு பந்து பட்டும், ஸ்டம்பின் பெயில்ஸூகள் விழாதது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய முன்னாள் நட்சத்திர வீரர் வார்னே உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரும், இந்த வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, கிரிக்கெட்டில் இதற்கு புதிய விதியை கொண்டு வரவேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், பந்துவீச்சாளர்களுக்கு பேவராக இருப்பது கூட பேட்ஸ்மேன்களின் கடமை என வார்னேவை டேக் செய்து கிண்டலடித்துள்ளார்.
ALSO READ | ரிஷப் பந்தின் மோசமான ஆட்டம் குறித்து அவரிடம் பேசவுள்ளோம் - ராகுல் டிராவிட்!
இந்திய விக்கெட் கீப்பராக இருந்த தினேஷ் கார்த்திக்கும் இந்த வீடியோவை பகிர்ந்து, " நீங்க ஆப் ஸ்டம்ப் மீது நம்பிக்கையாக இருக்கும்போது, ஆப் ஸ்டம்பும் உங்ளுக்கு நம்பிக்கையாக இருக்கும்" என தனது ஸ்டைலில் பஞ்ச் அடித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR