குஜராத் அணியில் இருந்து விலகும் ஆஷிஸ் நெஹ்ரா - புதிய கோச்சாகும் இந்திய சிக்சர் மன்னன்!
Ashish Nehra : குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஆஷிஸ் நெஹ்ரா விலக இருப்பதால், அந்த இடத்துக்கு மற்றொரு இந்திய முன்னாள் வீரரை நியமிக்க அந்த அணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா மற்றும் கிரிக்கெட் இயக்குநராக இருக்கும் விக்ரம் சோலங்கி ஆகியோரை மாற்ற திட்டமிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு குஜராத் அணி ஐபிஎல் தொடரில் அடியெடுத்து வைத்தபோது இந்திய அணியின் ஆஷிஸ் நெக்ரா அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். அந்த ஆண்டே, அதாவது ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் ஆண்டே அந்த அணி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. அடுத்த ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து இரண்டாது முறையாக சாம்பியன் ஆகும் வாய்ப்பை நூலிழையில் கோட்டை விட்டது. கடந்த ஆண்டு லீக் சுற்றோடு அந்த அணி வெளியேறது.
மேலும் படிக்க | சண்டையை ஆரம்பித்த ஹர்திக்... அதுவும் கம்பீரின் சகா உடன்... என்ன மேட்டர்?
இந்த சூழலில் தான் தலைமை பயிற்சியாளர் ஆஷிஸ் நெக்ராவை மாற்ற குஜராத் அணி முடிவெடுத்துள்ளது. இதனால் அந்த அணியுடனான நெக்ராவின் மூன்று ஆண்டுகள் பயணம் முடிவுக்கு வர இருக்கிறது. இருப்பினும் அதிகாரப்பூர் அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இப்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, குஜராத் அணியின் பயிற்சியாளர்கள் மாற்றப்படுவதற்கான பேச்சுவார்த்தை சென்று கொண்டிருப்பதாகவும், நெக்ரா இடத்துக்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவ்ராஜ் சிங்கை நியமிக்க அந்த அணி ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருப்பதாகவும் தெரிகிறது. ஆனால், எந்த இறுதி முடிவும் குஜராத் அணி இன்னும் எடுக்கவில்லை. எல்லாம் பேச்சுவார்த்தை அளவிலேயே இருக்கின்றன என தகவல் வெளியாகியிருக்கிறது.
இதேபோல், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பயிற்சியாளரை மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அணியின் பயிற்சியாளராக இருக்கும் டிரெவர் பேலிஸ் ஒப்பந்தத்தை அந்த அணி இன்னும் நீடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் பஞ்சாப் கிங்ஸ்அணியின் புதிய பயிற்சியாளராகவும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இன்னொருபுறம் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைமை பயிற்சியாளராக இருந்து இந்திய அணி டி20 உலகக்கோப்பை இரண்டாவது முறையாக வெல்ல காரணமாக இருந்த ராகுல் டிராவிட் மீண்டும் ஐபிஎல் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அவருடன் ஒரு சில அணிகள் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அவருக்கும், அந்த அணியின் உரிமையாளருக்கும் நல்ல நட்பு இருப்பதால் டிராவிட் ஆர்ஆர் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு புறம் ஐபிஎல் 2025 தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30 அல்லது 31 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதில் ஐபிஎல் ரீடென்சன், இம்பாக்ட்பிளேயர் ரூல் உள்ளிட்ட முக்கிய விஷயங்களும், ஐபிஎல் 2025 ஏலம் தொடர்பான விஷயங்களும் விவாதிக்கப்பட இருக்கின்றன. அந்த கூட்டத்திலேயே இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் ஏலம் தேதியும் முடிவு செய்யப்பட இருக்கிறது.
மேலும் படிக்க | இந்தியா சாம்பியன்ஸ் டிராபி விளையாடுமா? பாகிஸ்தான் வீசியிருக்கும் கடைசி அஸ்திரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ