இந்தியா சாம்பியன்ஸ் டிராபி விளையாடுமா? பாகிஸ்தான் வீசியிருக்கும் கடைசி அஸ்திரம்

இந்திய அணியை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க வைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தங்களுக்கு இருந்த கடைசி அஸ்திரத்தையும் வீசியிருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 23, 2024, 08:58 PM IST
  • சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்குமா?
  • இதுவரை முடிவை சொல்லாத இந்திய கிரிக்கெட் போர்டு
  • ஐசிசி கையில் பொறுப்பை ஒப்படைத்த பாகிஸ்தான் அணி
இந்தியா சாம்பியன்ஸ் டிராபி விளையாடுமா? பாகிஸ்தான் வீசியிருக்கும் கடைசி அஸ்திரம் title=

பாகிஸ்தான் இம்முறை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது. பிப்வரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி இந்த தொடரில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கவில்லை. மற்ற ஏழு அணிகளும் பாகிஸ்தானில் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில், இந்திய அணி மட்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. அதனால், இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்குமா? இல்லையா? என்பது இப்போது வரை மதிமேல பூனையாக இருக்கிறது.

மேலும் படிக்க | கேப்டன் சூர்யகுமார் யாதவை பார்த்ததும் ஹர்திக் கொடுத்த ரியாக்ஷன்..!

இப்போதைய சூழலில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு இல்லை. ஏனென்றால், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு ராஜாங்க ரீதியிலான உறவு முழுமையாக நிறுத்தப்பட்டிருப்பதால், மத்திய அரசு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல அனுமதி கொடுக்காது. அதனால், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் இந்திய அணியும் பாகிஸ்தான் செல்ல முடியாது. இதனை தெரிந்து கொண்ட பிசிசிஐ ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்துமாறு கோரிக்கை வைத்திருக்கிறது. அதற்குகூடுதல் செலவாகும்பட்சத்தில் அந்த தொகையை கூட கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா விளையாடும் போட்டிகளை நடத்துமாறு பிசிசிஐ, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் சூசகமாக தெரிவித்திருக்கிறது. ஆனால், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் இந்த முடிவுக்கு ஒப்புக் கொள்ள முடியாது என ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானிலேயே நடத்தப்படும் என்றும், இந்தியாவுக்காக போட்டியை வேறு நாட்டில் நடத்த ஒப்புக் கொள்ளமாட்டோம் என தெரிவித்திருக்கிறது. இந்தியா வரவில்லை என்றாலும் மற்ற நாடுகளைக் கொண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த தயாராகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உள்ளது. 

இதனால் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க முடியாமல் ஐசிசி திணறிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டும், இந்தியா பங்கேற்கிறதா? இல்லையா? என்பதை ஐசிசி பார்த்துக் கொள்ளட்டும், நாங்கள் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம் என தெரிவித்துள்ளது. ஒருவேளை இந்தியா சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்கவில்லை என்றால் இந்திய அணிக்கு பதிலாக இலங்கை அணி தகுதி பெற்று விளையாடும். அத்துடன் ஐசிசி நடத்தும் எந்த சர்வதேச போட்டிகளிலும் இந்திய அணியுடன் விளையாட மாட்டோம் என்ற முடிவையும் பாகிஸ்தான் ஐசிசிக்கு தெரிவித்துள்ளது. இதனால், சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடப்பது என்பது இப்போது வரை திரில்லராக சென்று கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க | ராகுல் டிராவிட் ஐபிஎல் ரிட்டர்ன்ஸ் உறுதி, கேகேஆர் இல்லை - பேச்சுவார்த்தை நடத்தும் அணி இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News