இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் கான்பூர் டெஸ்ட் போட்டி 3வது நாளை எட்டியுள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபாரமாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர், அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அவருக்கு பக்கபலமாக சுப்மான் கில் 52 ரன்களும், ஜடேஜா 50 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த அணியின் தொடக்க வீரர்களான வில் யங் மற்றும் டாம் லாதம் ஆகியோர் அரைசதம் அடித்து, இந்திய அணியை திணறடித்தனர். முதல் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் 3 வது நாள் (India vs New Zealand) ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, பல்வேறு யுக்திகளைக் கையாண்டு நியூசிலாந்து ஓபனிங் கூட்டணியை உடைக்க முயற்சி எடுத்தது. அதற்கு அஸ்வின் வந்தவுடன் பலன் கிடைத்தது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வில் யங், அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பரத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.


ALSO READ | இந்தியா VS நியூசிலாந்து; அஸ்வின் மாயாஜாலம், வில்லியம்சன் அவுட்


இதனால் உற்சாகமடைந்த இந்திய வீரர்கள் அடுத்தடுத்த விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் பந்து வீசினர். அப்போது, அஸ்வின் (Ravichandran Ashwin) பந்து வீசும் ஸ்டைலில் அதிருப்தியடைந்த நடுவர் நிதின் மேனன், அஸ்வின் ஓவர் வீசம்போதெல்லாம் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தார். அதாவது, அரவுண்ட் ஸ்டிக்கில் இருந்து பந்துவீசிய அஸ்வின், மூவிங்கில் ஓவர் ஸ்டிக் பக்கம் கிராஸாக சென்றார். இது நடுவர் நிதின் மேனன் பார்ப்பதற்கும், இன்னொரு என்டில் நின்றுகொண்டிருக்கும் மற்றொரு பேட்ஸ்மேன் ரன் ஓடுவதற்கும் இடைஞ்சலாக இருந்ததாக கூறப்படுகிறது.


இது குறித்து புகார் தெரிவித்த நடுவர் நிதின்மேனன், கேப்டன் ரகானேவை அழைத்து முறையிடவும் செய்தார். அப்போது, சென்ற அஸ்வின், மேட்ச் ரெஃப்பரியிடம் பேசிவிட்டதாகவும், இது ஐசிசி விதிமுறையிலும் தவறு இல்லை எனத் தெரிவித்தார். ரகானேவும், அஸ்வின் டேஞ்சர் பகுதியில் பந்துவீச வில்லையே எனக் கூறினார். கோபமாக இருந்த நடுவர் நிதின்மேனன், அஸ்வின் பந்துவீசும் ஸ்டைலால் தன்னால் எல்.பி.டபள்யூ உள்ளிட்டவைகளை சரியாக காண முடியாததால், விக்கெட் கொடுக்க முடியாது எனத் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அஸ்வின், நீங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்றால் நான் டி.ஆர்.எஸ் எடுத்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.


 



 


அஸ்வினுக்கும், நடுவர் நிதின் மேனனுக்கும் நடைபெற்ற வாக்குவாதம் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த டாம் லாதம், அஸ்வின் பந்துவீச்சில் எல்.பி.டபள்யூ ஆனார். அஸ்வினின் அந்த அப்பீலுக்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை. கேப்டன் ரகானேவும் ரிவ்யூ எடுக்காத நிலையில், ரிப்ளேவில் அது கிளியர் அவுட் என தெரிந்தது. இதில் கடுப்பான அஸ்வின், மைதானத்தில் எட்டி உதைத்து கோபத்தை வெளிப்படுத்தினார்.


ALSO READ | இந்திய அணிக்கு பின்னடைவு: நியூசிலாந்து தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR