நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஹாட்ரிக் வெற்றி டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ரன்கள் வித்தி யாசத்தில் இந்தியா வென்றது. கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டில் 174 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.


இந்நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது. மேலும் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.


அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 3-வது போட்டியில் 13 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த தொடரில் மொத்தம் 27 விக்கெட்டுகள் கைப்பற்றியதால் அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.