Ravichandran Ashwin: அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் வந்து பந்துவீசுவார் - தினேஷ் கார்த்திக்
Ravichandran Ashwin: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விலகிய ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் களத்துக்கு திரும்பி பந்துவீசுவார் என கமெண்டரியில் இருக்கும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அஸ்வின் விலகினார். அவருடைய இந்த முடிவுக்கு பிசிசிஐ அனுமதி கொடுத்ததுடன், முழு ஆதரவையும் அளிப்பதாக தெரிவித்தது. மேலும், அஸ்வினின் பிரைவசிக்கு அனைவரும் ஆதரவைக் கொடுக்க வேண்டும் என்றும் பிசிசிஐ கேட்டுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து அஸ்வின் ராஜ்கோட்டில் இருந்து சென்னை திரும்பினார். இந்த சூழலில் அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் இந்திய அணிக்குள் வந்து பந்துவீசுவார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | IND vs ENG: 3வது டெஸ்டில் இருந்து விலகிய அஸ்வின்! மாற்று வீரர் இவரா?
கமெண்டரியில் பேசிக் கொண்டிருந்தபோது அந்த அப்டேட்டை அவர் கொடுத்தார். இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசும்போது, " அஸ்வின் இந்த போட்டிக்குள் எப்போது வேண்டுமானாலும் வந்து நேராக பந்துவீசுவார். இது குறித்து நடுவர்களிடம் தெரிவிக்கப்பட்டு அவர்களும் இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளனர்." என கூறினார். இதன் மூலம் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சர்ஃபிராஸ்கான் 62 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. அஸ்வின் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அஸ்வின், ஜாக் கிராலி விக்கெட் வீழ்த்தியது அவரின் 500வது விக்கெட்டாகும். இந்திய பந்துவீச்சாளர்களில் 500 விக்கெட் எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அஸ்வின் படைத்தார். இந்த சூழலில் தான் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவலை அறிந்து, இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி வெளியேறினார்.
மேலும் படிக்க | அஸ்வின் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல்...! யாருக்கு என்ன ஆச்சு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ