நான் வீழ்வேனென்று நினைத்தாயோ! தொடரும் அஸ்வினின் மாயாஜாலம்!
நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அஸ்வின் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
உலக கோப்பை டி20 போட்டியில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். பவர் பிளேயில் சிறப்பாக பந்துவீசும் திறமை கொண்ட அஸ்வினை இவ்வளவு நாட்கள் அணியில் சேர்க்காமல் இருந்ததற்கான சரியான காரணங்கள் எதுவும் சொல்லப்படுவதில்லை. தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் அஸ்வின். பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அவ்வபோது தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
ALSO READ இந்தியாவில் நடைபெறப்போகும் 3 உலக கோப்பை போட்டிகள்!
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக பந்து வீசினார். நிறைய ஆட்டங்களில் விக்கெட்டுகளை கைப்பற்ற வில்லை என்றாலும் எதிர் அணியின் ரன் ரேட்டை முக்கியமான கட்டத்தில் குறைத்துள்ளார். உலகக் கோப்பை 2021-ல் சிக்ஸர்கள் அடிக்க விடாத ஸ்பின்னர் என்ற பெருமையை பெற்றுள்ளார் அஸ்வின். பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அஸ்வினை அணியில் எடுத்திருந்தால் விக்கெட்டுகளை எடுத்து இருப்பார் என்ற ஒரு கருத்து இருந்து வருகிறது. அந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்தியால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை.
நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அஸ்வின் 4 ஓவர்களுக்கு 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முக்கியமான கட்டத்தில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் அவரது கடைசி நான்கு டி20 போட்டிகளில்
(4-0-14-2), (4-0-29-1), (4-0-20-3), (4-0-23-2) என்ற கணக்குகளில் சிறப்பாக பந்துவீசி உள்ளார். நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று அனைவருக்கும் சொல்லும் விதமாக தற்போது இந்திய அணியில் கலக்கி வருகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். அஸ்வினின் மாயாஜாலம் அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
ALSO READ இந்திய அணியின் டி20 கேப்டனாக ரோஹித் சர்மாவின் சாதனை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR