50 ஓவர் முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்துள்ளது. ஹாங்காங் அணி வெற்றி பெற 286 ரன்கள் தேவை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹாங்காங் அணியில் கின்சித் ஷா மூன்று விக்கெட்டும், எஹ்சான் கான் இரண்டு விக்கெட்டும் எடுத்தனர்



7வது விக்கெட்டை இழந்தது இந்தியா; சரதுல் தாகூர் 0(3) அவுட்


 




6வது விக்கெட்டை இழந்தது இந்தியா; புவனேஷ்வர் குமார் 9(18) அவுட்


 




42.3 ஓவரில் இந்திய அணி ஐந்தாவது விக்கெட்டை இழந்தது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 33(38) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது கேதர் ஜாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆடி வருகின்றனர்.


 




41.4 ஓவரில் இந்திய அணி நான்காவது விக்கெட்டை இழந்தது. முன்னால் கேப்டன் எம்.எஸ். தோனி 0(3) ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். தற்போது தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் கேதர் ஜாதவ் ஆடி வருகின்றனர்.


 




3வது விக்கெட்டை இழந்தது இந்தியா. தனது 14 வது சதத்தை பூர்த்தி செய்த ஷிகர் தவான் 127(120) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் முன்னால் கேப்டன் எம்.எஸ். தோனி ஆடி வருகின்றனர்.


 




இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தனது ஒரு நாள் போட்டியில் 14வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 105 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். 


 




29.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்த போது இரண்டாவது விக்கெட்டை இழந்தது இந்திய அணி. அம்பதி ராயுடு 60(70) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது ஷிகர் தவான் மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆடி வருகின்றனர்.


 




28 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.


ஷிகர் தவான்* 76(82)


அம்பதி ராயுடு* 52(65)


 




இந்திய அணியின் வீரர் அம்பதி ராயுடு ஒரு நாள் போட்டியில் தனது 7_வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 63 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். 


 




இருபது ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.


ஷிகர் தவான்* 56(60)


அம்பதி ராயுடு* 29(38)


 




இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தனது ஒரு நாள் போட்டியில் 26 வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 57 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். 



தேநீர் இடைவேளை வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. அரை சதத்தை நோக்கி ஷிகர் தவான்.


ஷிகர் தவான்* 45(49) 


அம்பதி ராயுடு* 15(25)


 




7.4 ஓவரில் 45 ரன்கள் எடுத்த போது முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி. ரோஹித் ஷர்மா 23(22) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது ஷிகர் தவான் மற்றும் அம்பதி ராயுடு ஆடி வருகின்றனர்.


 




ஐந்து ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான்* 11(15) ரன்களும், ரோஹித் ஷர்மா* 22(15)ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர். 


 




 



 



 



 



 



இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.


 




துபாயில் நடைபெற்று வரும் ஆசியா கோப்பை தொடரின் இன்று நடைபெறும் 4 வது போட்டியில் இந்தியா மற்றும் ஹாங்காங் மோதுகின்றன. இந்த போட்டி துபாய் சர்வதேச விளையாட்டு மைதானத்தில், இன்று மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது. 


ஆசியா தொடரின் முதல் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. அதேபோல ஹாங்காங் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஹாங்காங் அணி உள்ளது. ஒருவேளை தோல்வி அடைந்தால் தொடரை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.


இந்திய அணியை பொருத்த வரை கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதால், கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்றுள்ளார். அவருக்கு பக்கபலமாக முன்னால் கேப்டன் எம்.எஸ். தோனி இருப்பார். "பி" பிரிவில் உள்ள இந்திய அணி இன்று வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.


 



இந்திய அணி நாளை தனது 2 வது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோத உள்ளதால், இன்று நடைபெற உள்ள ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டம் முக்கிய ஆட்டமாக பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே இந்த தொடரில் "ஏ" பிரிவில் இடம் பெற்ற இலங்கை அணி இரண்டு போட்டியில் தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.