Asia Cup 2018, SLvAFG: இலங்கை அணி வெற்றி பெற 250 ரன்கள் தேவை
இன்றைய ஆசியா கோப்பை 2018 போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை விளையாடி வருகின்றனர்.
இலங்கை அணி வெற்றி பெற 250 ரன்கள் தேவை.
50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களை இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணியில் ரஹ்மத் ஷா 72(90) ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் திசரா பெரேரா ஐந்து விக்கெட்டும், அகிலா தன்ஜாயா இரண்டு விக்கெட்டும், லசித் மலிங்கா, துஷ்மந்த சேமேரா, ஷேஹன் ஜெயசூரியா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
ஒன்பது விக்கெட்டை இழந்த ஆப்கானிஸ்தான் அணி. 49.4 ஓவர் முடிவில் 249 ரன்கள் எடுத்துள்ளது.
எட்டு விக்கெட்டை இழந்த ஆப்கானிஸ்தான் அணி. 49.1 ஓவர் முடிவில் 242 ரன்கள் எடுத்துள்ளது.
ஐந்து விக்கெட்டை இழந்த ஆப்கானிஸ்தான் அணி. 45 ஓவர் முடிவில் 208 ரன்கள் எடுத்துள்ளது.
ஆசியாவின் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் செப்டம்பர் 15-ஆம் நாள் துவங்கி செப்டம்பர் 28-ஆம் நாள் வரை நடைபெறுகிறது.
இத்தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஷேக் ஜாயேத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக முகம்மது ஷஹ்சாத் மற்றும் இஷ்சனுல்லா ஜனாத் களம் கண்டார்கள்.
விக்கெட் இழப்பின்றி 10 ஓவருக்கு 50 ரன்களை எடுத்தது ஆப்கானிஸ்தான் அணி. 11.4 வது ஓவரில் முகம்மது ஷஹ்சாத் 34(47) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆப்கானிஸ்தான் அணி 100 ரன்களை கடந்த பின்னர் இரண்டாது விக்கெட்டை இழந்தது. இஷ்சனுல்லா ஜனாத் 45(65) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்த இரண்டு விக்கெட்டையும் இலங்கை வீரர் தனன்ஜெயா கைப்பற்றினார்.
பின்னர் ரஹ்மத் ஷாவுடன் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்கார் ஆப்கான் சேர்ந்து விளையாடினார். ஆனால் வந்த வேகத்திலேயே ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்கார் ஆப்கான் ஒரு ரன் எடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் நன்றாக விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்த ரஹ்மத் ஷா 72(90) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இலங்கை அணியின் பந்து வீச்சு சிறப்பாக உள்ளது.