ஆசிய கோப்பையின் சூப்பர்-4 ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. துபாயில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறும் வீரர்கள் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய ஜடேஜா காயம் காரணமாக தொடரில் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளார். அவரின் விலகல் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதேபோல், பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கிற்கு மீண்டும் இந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா? அல்லது முதல் போட்டியில் விளையாடாத ரிஷப் பன்ட் இந்த போட்டியில் களமிறக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிச்சயம் மாற்றம் இருக்கும். ஹாங்ஹாங் அணிக்கு எதிராக பன்ட் விளையாடினாலும், இந்த போட்டியில் அவருக்கான வாய்ப்பு என்பது கேள்விக்குறி. அதேபோல், காய்ச்சல் காரணமாக ஆவேஷ் கான் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக யாரை கேப்டன் ரோகித் சர்மா சேர்க்கப்போகிறார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.


மேலும் படிக்க | மீண்டும் மோதிக்கொள்ளும் இந்தியா பாகிஸ்தான்! ஆசிய கோப்பையில் சுவாரஸ்யம்!


மேலும் படிக்க | கே.எல். ராகுலை நீக்க சொல்கிறீர்களா?... பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்ட சூர்யகுமார் யாதவ்


லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவலின்படி, ஹாங்காங் அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பன்ட் கீப்பிங் செய்திருப்பதால், ஒருவேளை அவரே கூட கீப்பராக களமிறக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஆவேஷ் கானுக்கு பதிலாக அஸ்வின் முதன்முறையாக இந்த தொடரில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்படலாம். இதேபோல் பாகிஸ்தான் அணியிலும் காயம் பிரச்சனை தலைதூக்கியுள்ளது. அந்த அணியின் ஷாநவாஸ் தஹானி காயத்தால் தொடரில் இருந்து விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக யாரை களமிறக்கலாம் என கேப்டன் பாபர் அசாம் யோசித்துக் கொண்டிருக்கிறார். இரு அணிகளிலும் தரமான வீரர்கள் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் மாற்றம் இருக்காது. முதல் போட்டியில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி, நிச்சயம் இந்தப் போட்டியில் பழிதீர்க்க கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் என்பதால், ரசிகர்கள் ஆவலுடன் போட்டியை எதிர்நோக்கியுள்ளனர். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata