இலங்கையில் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் ஆசியா கோப்பை போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. எந்த வித முடிவும் கிடைக்காமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கும். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்த இந்த போட்டியில் மழை வந்து சொதப்பியதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் நடக்கும் ஆசிய கோப்பை தொடரில் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது.  கண்டி பல்லேகலே சர்வதேச மைதானத்தில், இந்தியா தனது முதல் போட்டியில் உலகின் நம்பர் 1 ஓடிஐ அணியான பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது. மழை வந்து ஆட்டம் தடைபட்டதால், தற்போது இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றில் இடம் பிடித்துள்ளது. இந்த போட்டியில் ஒரு இன்னிங்க்ஸ் மட்டுமே நடந்தாலும், அதுவும் இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்கே உரித்தான விறுவிறுப்புடன் இருந்தது. 


முன்னதாக, இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மான்செஸ்டரில் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை மோதலுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்றுதான் நேருக்கு நேர் சந்தித்தன.  


முதல் இன்னிங்க்ஸ் முடிவில் 48.5 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக, ஹார்திக் பாண்டியா 87 ரன்களை எடுத்தார். இஷான் கிஷன் 82 ரன்களை எடுத்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டார் வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஷ்றேயஸ் ஐயர், ஷுப்மன் கில் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகினர். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிதி, நசீம் ஷா, ஹேரிஸ் ரவுஃப் ஆகியோர் அபாரமாக பந்து வீசினர். ஷாஹீன் அஃப்ரிதி 4 விக்கெட்டுகளையும், நசீம் மற்றும் ஹேரிஸ் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 


முன்னதாக நேபாளத்தில் நடந்த துவக்கப்போட்டியில் பாகிஸ்தான் நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. ‘ஹைப்ரிட்’ மாதிரியில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 


ஆசிய கோப்பை தொடரில் இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியவை குரூப் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. ஒரு அணி குரூப்பில் இருக்கும் மற்ற 2 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். பின்னர், குரூப் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். 


பல நாடுகளுக்கு இடையில் பல்வேறு போட்டிகள் நடந்தாலும் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் அது இந்தியா பாகிஸ்தான் ரசிகர்களை தாண்டி உலக அளவிலும் அதிகம் விரும்பப்பட்டு பார்க்கப்படுகின்றது. உலகத் தரமான பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள பாகிஸ்தான் அணியும், வேற லெவல் பேட்டிங் படையை வைத்துள்ள இந்திய அணியும் எதிர்வரும் இந்த மூன்று மாதங்களில் பல முறை மோதும் வாய்ப்பு ஏற்படும். ஆகையால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரும் காலம் கொண்டாட்டமாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை!! 


பிளேயிங் லெவன்


பாகிஸ்தான்: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்


இந்தியா: ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்


மேலும் படிக்க | Asia Cup 2023, IND vs PAK Live Updates: மழை காரணமாக ஆட்டம் ரத்து.. ரசிகர்களுக்கு ஏமாற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ