ஆசிய கோப்பை டி-20: பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணி
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது!
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் -3 ஆம் தேதி மலேசியவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, வங்காளதேசம், மலேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 6 அணிகள் பங்கேற்று விளையாடும், இந்த கிரிக்கெட் தொடரானது ஜூன் 10 ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்நிலையில், இந்த 6 அணிகளுக்கான குருப் சுற்றுக்கள் முடிந்த நிலையில், பட்டியலில் முதலிடம் வகித்த இந்திய அணி, பட்டியலில் இரண்டாம் இடம் வகித்த பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இந்த போட்டியில், முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து இருந்தது. இதையடுத்து, 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 16.1 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது
இதன் மூலம் இந்திய மகளிர் அணி நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.