இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய ஆறு அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள இந்தத் தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமின்றி நீண்ட வருடங்கள் சதம் அடிக்காமல் இருக்கும் கோலி இந்த தொடரில் சதம் அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். நிலைமை இப்படி இருக்க இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆசிய கோப்பையில் புதிய சாதனை படைப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.



அதாவது, ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரராக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி முதலிடத்தில் இருக்கிறார். அவர் 27 ஆட்டங்களில் மொத்தம் 26 சிக்சர்கள் அடித்துள்ளார். ரோஹித் சர்மா இதுவரை 21 சிக்சர்கள் அடித்திருக்கிறார். அஃப்ரிடியின் சாதனையை முறியடிக்க ரோஹித்துக்கு இன்னும் 6 சிக்ஸர்கள் தேவை. 


அதேபோல், ஆசிய கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்னை தொடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறவும் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்புள்ளது. அவர் இதுவரை ஆசிய கோப்பையில் 883 ரன் எடுத்துள்ளார். விராட் கோலி 766 ரன்கள் (16 ஆட்டம்) எடுத்து அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். 


 



இந்திய வீரர்களில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 971 ரன்களை எடுத்திருக்கிறார். எனவே ரோஹித் சர்மா இன்னும் 88 ரன்கள் எடுக்கும்பட்சத்தில் ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெறுவார். 


 மேலும் படிக்க | 7+18... தல தோனி குறித்து விராட் கோலி நிகழ்ச்சி


மேலும், இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா 24 ஆட்டத்தில் 1220 ரன் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். ரோஹித் சர்மா முழு ஃபார்மில் விளையாடினால் அவரால் ஜெயசூர்யாவின் சாதனையையும் முறியடிக்க முடியும் என்பதால் அவரது ரசிகர்கள் ஹிட்மேன் மீது பல எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிண்றனர்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ