துபாய்: துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில், இந்திய அணி 40 ரன் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது... பாகிஸ்தான், ஹாங்காங்கை வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் ஹாங்காங் அணியுடன் களம் கண்ட இந்தியா வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- ஹாங்காங் (ஏ பிரிவு) அணிகள் மோதின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் இந்திய அணி விளையாடி, இலக்கை எட்டியது.



இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். 


மேலும் படிக்க |  பாகிஸ்தான் கேப்டனை வெளுத்து வாங்கிய சோயிப்அக்தர்


கடைசி ஓவரில் இந்திய அணி 26 ரன்களை குவித்தது. ஹாங்காங் அணிக்கு எதிராக இந்திய அணி 2 விக்கெட்களை இழந்து. 192 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட்டிங்கில் இறங்கிய ஹாங்காங் அணி, 40 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது.


22 பந்துகளில் அரைசதம் விளாசினார் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் என்றால், விராட் கோலி தனது 31வது அரைசதத்தை இந்தப் போட்டியில் பூர்த்தி செய்தார்.


மேலும் படிக்க | இனி உலக கோப்பை போட்டிகள் Hotstar-ல் ஒளிபரப்பு இல்லை?


கேஎல் ராகுல் 39 பந்துகள் எதிர்கொண்டு 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டியில் 3500 ரன்களை கடந்தாலும், 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 


சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும். அதே சமயம் 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்குடன் 2 முறை மோதி இருக்கிறது.


மேலும் படிக்க | இந்தியா Vs பாகிஸ்தான் - சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளர்கள்


மேலும் படிக்க | IND vs PAK: ’அந்த தவறு இந்த முறை நடக்காது’ இந்தியாவின் ’கேம்’ பிளான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ