Asia Cup 2022: பாகிஸ்தான் கேப்டனை வெளுத்து வாங்கிய சோயிப்அக்தர்

India vs Pakistan Shoaib Akhtar: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தான் தோல்வி அடைந்த நிலையில், பாகிஸ்தான் கேப்டன் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் சோயிப் அக்தர் 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 29, 2022, 01:07 PM IST
  • பாகிஸ்தான் அணியை சாடும் அக்தர்
  • கேப்டன் பாபர் ஆசம் எடுத்த மோசமான முடிவுகள்
  • பட்டியலிட்டு விளாசிய சோயிப் அக்தர்
Asia Cup 2022: பாகிஸ்தான் கேப்டனை வெளுத்து வாங்கிய சோயிப்அக்தர் title=

Asia Cup2022: துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் அணி, பந்துவீச்சிலும் சில தவறுகளை செய்தது. அதனையெல்லாம் சுட்டிக்காட்டி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், பாகிஸ்தான் கேபட்ன் பாபர் அசாமின் முடிவுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். 

கடும் கோபத்தில் சோயிப் அக்தர்

பாகிஸ்தானின் தோல்விக்குப் பிறகு, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது யூடியூப் சேனலில் பேசினார். அதில், இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே போட்டி கடுமையாக சென்றது. ஆனால், ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளார். இரு அணிகளும் சரியான அணியை களமிறக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.  

தோற்கடிக்க முயற்சித்ததாகவும், ஆனால் ஹர்திக் பாண்டியா இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டு தனது எல்லையைத் தாண்டியதாகவும் கூறினார். மேலும் பேசிய சோயப் அக்தர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் கேப்டன்கள் சரியான அணி தேர்வை செய்யவில்லை.

மேலும் படிக்க | IND vs PAK: தேசிய கொடியை வாங்க மறுக்கும் ஜெய் ஷா! வைரலாகும் வீடியோ!

பாபர் அசாம் மீது சாடல்

டி20 வடிவத்தில் மூன்றாவது இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்று  நான் பலமுறை பாபர் அசாமிடம் கூறிவிட்டேன். ஃபகார் ஜமான், முகமது ரிஸ்வானுடன் ஓபனிங் இறங்க வேண்டும். ஆனால், இந்த கூட்டணியை அணி நிர்வாகம் முயற்சிக்கவில்லை. ஆசிப் அலிக்கு முன்பு ஷதாப் கான் பேட்டிங் அனுப்பப்பட்டது ஏன்? என்று வினவியுள்ள அக்தர், ஒரு கேப்டனாக எப்படி அவரால் இப்படி சிந்திக்க முடிந்தது? என வினவியிருக்கிறார். இப்திகாரை 4வது இடத்தில் பேட் செய்ய அனுமதித்து ஏன்?, முகமது நவாஸூக்கு 17வது ஓவரை கொடுத்திருக்க வேண்டும் என கூறியுள்ள அக்தர், இதெல்லாம் பாபர் அசாமின் தவறான முடிவுகளை காட்டுவதாக சாடியிருக்கிறார்

முகமது ரிஸ்வான் மீது சாடல்

முகமது ரிஸ்வான் போன்ற வீரர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 45 பந்துகளில் 45 ரன்கள் எடுப்பதால் என்ன பயன்?. முதல் 6 ஓவர்களில் 19 டாட் பால்கள் பதிவாகியிருக்கிறது. இப்படியான சூழலில் எப்படி பெரிய ஸ்கோரை அடிக்க முடியும் என சரிமாரியாக பாகிஸ்தான் அணியை சாடியுள்ளார் சோயிப் அக்தர்.   

மேலும் படிக்க | IND vs PAK: ’அந்த தவறு இந்த முறை நடக்காது’ இந்தியாவின் ’கேம்’ பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News