ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5,000 மீட்டர் ஓட்ட பந்தியத்தில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான பிரிவில் 5000 மீட்டர் ஓட்டத்தில் களமிறங்கிய புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இந்திய வீரர் லட்சுமணன் 14 நிமிடம் 54.48 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.


ஒரே நாளில் இந்தியாவுக்கு 7 பதக்கம் கிட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.