Asian Games நாள் 12: ஒரே நாளில் 2 தங்கம், 1 வெள்ளி கைப்பற்றியது இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்தியாவுக்கு 13வது தங்கம் கிடைத்த்துள்ளது.
18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் 12-வது நாளான இன்று இந்தியாவுக்கு இரண்டு தங்க பதக்கம் கிடைத்துள்ளது. 1500 மீட்டர் ஆண்கள் ஓட்ட பிரிவிலும், பெண்கள் 4*400 மீட்டர் தங்கம் வென்றுள்ளார். இது இந்தியாவுக்கு 13 வது தங்கமாகும்.
ஹிமா டேஸ், எம்.ஆர் பூவாமமா, சரதபேன் கயக்வாத் மற்றும் வி.கே. விஸ்யாசியா ஆகியோரின் குழு சார்பாக ஆசிய விளையாட்டு போட்டியின் பெண்கள் 4*400 மீட்டர் ஓட்ட பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளனர். இந்த தூரத்தை இவர்கள் 3:28.72 நிமிடங்களில் கடந்தார்கள்.
ஆசிய விளையாட்டு போட்டியின் ஆண்கள் 4*400 மீட்டர் ஓட்ட பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. இந்த தூரத்தை இவர்கள் 3:01.85 நிமிடங்களில் கடந்தார்கள்.
இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் 1500 மீட்டர் ஆண்கள் ஓட்ட பிரிவில் தங்கம் வென்றார்.
இந்தியாவின் சீமா புனியா பெண்கள் வட்டு எறிதல் பிரிவில் வெண்கலத்தை வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த 56வது பதக்கம் ஆகும்.
இந்தியாவின் சித்ரா உன்னிகிருஷ்ணன் பெண்கள் 1500 மீட்ட ஓட்ட பந்தியத்தில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இந்தியாவின் 55வது பதக்கம் ஆகும்.