ஆசிய விளையாட்டுப் போட்டி 2018: 4-வது வெள்ளி பதக்கத்தை வென்றது இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய வீரர் ஷர்துல் விஹான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இன்று துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் 15 வயதே ஆன இளம் வீரர் ஷர்துல் விஹான், 73 புள்ளிகள் எடுத்து 4வது வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் துப்பாக்கிச் சுடுதலில் பிரிவில் 8வது பதக்கத்தை கைப்பற்றி உள்ளது இந்தியா.
தற்போதிய நிலவரப்படி, இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி 9 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது. புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் சுமார் 45 நாடுகள் பங்கேற்றுள்ளது. செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.
ஆசிய விளையாட்டு போட்டியில் கடைசியாக 25 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ரஹி சர்னோபத் மூலம் 4வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா.