Asian Games 2023 Medal Tally: 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 10வது நாளில் இந்தியா 15வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல ஓட்டப்பந்தய வீராங்கனை பருல் சவுத்ரி 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 15 நிமிடம் 14:75 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பெற்றார். பாருலுக்குப் பிறகு 800 மீட்டர் ஓட்டத்தில் முகமது அப்சல் (1 நிமிடம் 48.43 வினாடி) வெள்ளியும், மும்முறை தாண்டுதல் போட்டியில் பிரவீன் வெண்கலமும் வென்றனர். செவ்வாயன்று இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றது. அதேபோல இன்று நடைபெற்ற 400 மீ தடைகள் தாண்டுதல் ஓட்ட பந்தயத்தில் 55.68 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கல பதக்கத்தை தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் வென்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் பதக்கங்களுக்குப் பிறகு, இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 15 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என 68 பதக்கங்களாக மாறியுள்ளது.



10வது நாள் பதக்கங்களின் பட்டியல் விவரம்


கேனோ (வெண்கலம்) - படகுப் போட்டியில் இந்தியா முதல் நாள் பதக்கம் வென்றது. 1000 மீட்டர் கேனோ போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் சிங் மற்றும் சுனில் சலாம் ஜோடி பந்தயத்தை 3 நிமிடம் 53.329 வினாடிகளில் முடித்து வெண்கலம் வென்றனர். பந்தயத்தை 3 நிமிடம் 43.796 வினாடிகளில் கடந்து உஸ்பெகிஸ்தான் ஜோடி தங்கம் வென்றது. இரண்டாவது இடத்தில் கஜகஸ்தான் ஜோடி இருந்தது.


மேலும் படிக்க - இந்த உலகக் கோப்பையை தூக்கப்போகும் கேப்டன் இவர்தான்... பிரபல ஜோசியரின் பக்கா கணிப்பு!


குத்துச்சண்டை (வெண்கலம்) - அரையிறுதி ஆட்டத்தில் ப்ரீத்தி தோல்வியடைந்தார், லோவ்லினா பைனலில் தோல்வியடைந்தார். பெண்களுக்கான 50-54KG குத்துச்சண்டை போட்டியில், ப்ரீத்தி அரையிறுதியில் சீனாவின் யுவான் செங்கிடம் 5-0 என தோற்கடிக்கப்பட்டார், ஒலிம்பிக் பதக்கம் வென்ற லோவ்லினா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆசியாவின் குத்துச்சண்டையில் அரையிறுதியில் தோல்வியடையும் இரு வீராங்கனைகளுக்கும் வெண்கலம் வழங்கப்படும் என்பதால், ப்ரீத்தி வெண்கலப் பதக்கம் கிடைக்கும்.


தடகளம் (வெண்கலம்) - 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் 55.68 மீட்டர் தூரம் இலக்கை எட்டி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். பஹ்ரைனின் முஜிதாத் அடேகோயா முதலிடத்திலும், சீனாவின் மோ ஜியாடி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.


தடகளம் (தங்கம்) - பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். பருல் 15 நிமிடங்கள், அதாவது 14:75 என்ற நேரத்தில் இலக்கை அடைந்தார். இரண்டாம் இடம் பெற ஜப்பானின் ரிரிகா ஹிரோனகா (15:15:34) வெள்ளியும், கஜகஸ்தானின் கரோலின் (15:23:12) வெண்கலமும் வென்றனர்.


தடகளம் (வெள்ளி) - ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்த முகமது அப்சல், ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்று தந்துள்ளார். அவர் 1 நிமிடம் 48:43 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.


 



மேலும் படிக்க - 'இந்தியா என்றால் பாகிஸ்தான் வீரர்கள் பயப்படுகிறார்கள்' - ஒரே போடாக போட்ட பாக். மூத்த வீரர்


ரேங்க் நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 156 85 44 285
2 தென் கொரியா 33 45 49 127
3 ஜப்பான் 32 42 63 137
4 இந்தியா 15 26 28 69
5 உஸ்பெகிஸ்தான் 13 14 21 48

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ