பெடரேஷன் கோப்பை தேசிய தடகள சாம்பியன்ஷிப் 400 மீ., தடை தாண்டும் ஓட்ட பிரிவில் தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், 23-வது பெடரேஷன் கோப்பை தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் ஆண்களுக்கான 400 மீ., தடை தாண்டு ஓட்டத்தில் பந்தய துாரத்தை 48.80 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.


இதன் மூலம் இவர், தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்துளார்.


கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடைப்பெற்ற ஆசிய விளையாட்டில் பந்தய துாரத்தை இவர் 48.96 வினாடியல் கடந்திருந்தது தேசிய சாதனையாக இருந்தது. இந்நிலையில் இவர் பந்தைய தூரத்தை 48.80 வினாடிகளில் கடந்து தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.


மேலும் இவர் தோகாவில் நடக்கவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதற்கான இலக்காக 50.00 வினாடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.


வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே கேரளாவின் ஜபிர் (49.53 வினாடி), தமிழகத்தின் ராமச்சந்திரன் (50.57 வினாடி) கைப்பற்றினர்.


பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் பந்தய துாரத்தை 2 நிமிடம், 03.21 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த தமிழகத்தின் கோமதி மாரிமுத்து தங்கம் வென்றுள்ளார்.  மேலும் இவர், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். இப்போட்டியில் பஞ்சாப் வீராங்கனை டிவிங்கில் சவுத்தரி (2 நிமிடம், 03.67 வினாடி) 2வது இடம் பிடித்து ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகுள் நுழைந்துள்ளார்.