பெண்களுக்கான 4-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்று இந்தியா-சீனா அணிகள் மோதின. 


2-3 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது. லீக் முடிவடைந்த நிலையில் புள்ளி பட்டியலில் சீனா 9 புள்ளிகளுடன் முதலிடமும் இந்தியா 7 புள்ளிகளுடன் 2-வது இடமும்  பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-சீனா அணிகள் மீண்டும் மோதுகின்றன. இந்த போட்டி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும்.