AsianGames2018: டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது!
டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா மற்றும் திவிஜ் ஷரன் தங்கம் வென்றுள்ளனர்...!
24 August 2018, 11:54 AM....
மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஹீனா சித்தூ வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்..!
24 August 2018, 11:56 AM.....
டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா மற்றும் திவிஜ் ஷரன் தங்கம் வென்றுள்ளனர்...!
தொடர்ந்து 6 நாளாக 18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் சுமார் 45 நாடுகள் பங்கேற்றுள்ளது. செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் 22 வது பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா. ஏற்கனவே துடுப்புபடகு போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியா மேலும் ஒரு தானாக பதக்கத்தை வென்றது. இந்நிலையில், தற்போது டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா மற்றும் திவிஜ் ஷரன் தங்கம் வென்றுள்ளனர்.
கஜகஸ்தானுடனான போட்டியில் இந்தியா மோதியதில் இந்தியா 6-3 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது..!
தற்போதைய நிலவரப்படி, இந்தியா 6 தங்கம், 4 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 23 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 7 வது இடத்தில் உள்ளது....!