ஐபிஎல் ஏலம் தற்காலிகமாக நிறுத்தம் - மயங்கி விழுந்த ஹக் எட்மீட்ஸ்
பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது ஏலம் அறிவிப்பாளராக செயல்பட்ட ஹக்எட்மீட்ஸ் திடீரென மயங்கி விழுந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களுருவில் நடைபெற்றது. தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஏலத்தில் ஹக் எட்மீட்ஸ் ஏலம் அறிவிப்பாளராக செயல்பட்டுக்கொண்டிருந்தார். இலங்கை வீரர் ஹசரங்காவை ஏலம் எடுக்க பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் கடுமையாக போட்டிப் போட்டுக்கொண்டிருந்தன. அப்போது, ஏலத்தொகையை அறிவித்துக் கொண்டிருந்த ஹக் எட்மீட்ஸ், திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
மேலும் படிக்க | டெல்லிக்கு திரும்பிய டேவிட் வார்னர் - ரிக்கிபாண்டிங் பிளான்
அவர் திடீரென சரிந்து விழந்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏலத்தில் பங்கேற்றிருந்த 10 அணியின் உரிமையாளர்களுக்கும், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உள்ளிட்டோருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏலம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஹக் எட்மீட்ஸ் 35 வருடம் ஏலம் அறிவிப்பாளராக செயல்பட்ட அனுபவம் உடையவர். தனது அனுபவத்தில் இதுவரை சுமார் 2,500க்கும் மேற்பட்ட ஏலங்களை நடத்தியுள்ளார். ஏலம் நடத்துவதிலும், கலை, விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள சிறந்த பொருட்களை ஏலம் எடுப்பதிலும் வல்லவரான அவருக்கு, ஐபிஎல் ஏலத்தின்போது ஏற்பட்ட இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அவரது உடல்நிலை குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022: ஏலத்தில் விலைபோகாத சுரேஷ் ரெய்னா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR