டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் கோலி!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி!
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட்கோலி டக்அவுட் ஆனதால், டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார்.
ஜமைக்காவில் தனது முதல் பந்து டக் அவுட் அடுத்து, இந்தியாவின் கேப்டன் விராட் கோலி 2-வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில் பேட்ஸ்மேன்களுக்கான MRF டயர்ஸ் ICC டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
எனினும் ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கோஹ்லியின் அணி, இரண்டு வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது, மேலும் கேப்டனே எம்.எஸ்.தோனியை முந்திக் கொண்டு இந்தியாவின் மிக வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக பெயர் எடுத்துள்ளார். இருப்பினும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் இன்னிங்சில் 76 ரன்கள் எடுத்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் ரன் ஏதும் இன்றி வெளியேறியது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற பின்னர் கோலியால் தனது 25 டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. இது அவரது புள்ளிப்பட்டியலில் உள்ள புள்ளிகளை விரையம் செய்துள்ளது.
செப்டம்பர் 3, செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட தரவரிசையில் ஹெடிங்லேயில் நடந்த மூன்றாவது டெஸ்டைத் தவறவிட்ட ஸ்மித், ஒரு புள்ளி முன்னிலை பெற, விராட் பின்னடைவு கண்டுள்ளார். புதன்கிழமை தொடங்கும் நான்காவது ஆஷஸ் டெஸ்டில் அந்த முன்னிலை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.
முன்னதாக கடந்த 2015 டிசம்பர் மாதம் முதல் ஸ்மித் இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். ஆகஸ்ட் 2018-இல், நியூலாண்ட்ஸ் பந்து சேதப்படுத்திய புகாரில் ஸ்மித் தடை எதிர்கொண்ட போது தான் கோலி அவரை தரவரிசையில் முந்தினார். இந்நிலையில் தற்போது மீண்டும் 904 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார். இவரைத்தொடர்ந்து இரண்டாம் இடத்தில் கோலி (903 புள்ளிகள்), மூன்றாம் இடத்தில் கேன் வில்லியம்சன் (878 புள்ளிகள்), நான்காம் இடத்தில் புஜாரா (825 புள்ளிகள்) ஆகியோர் உள்ளனர். இந்திய வீரர் ரஹானே 725 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில், பேட் கம்மிஸ் (908 புள்ளிகள்) முதல் இடத்திலும், ரபாடா (851 புள்ளிகள்) இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் பும்ரா 4 புள்ளிகள் உயர்வு கண்டு 835 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.