பாண்டிச்சேரி அணியின் பயிற்சியாளர் ஆகிறார் ஆஸ்திரேலியாவின் ஷான் டைட்!
புதுச்சேரி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இம்மாதம் பொறுப்பேற்கிறார் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட்.
முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட் உள்ளூர் போட்டிகளுக்கு புதுச்சேரி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ள ஷான் டைட் தற்போது புதுச்சேரி அணிக்கும் பயிற்சியாளராக உள்ளார். உள்ளூர் போட்டிகளுக்கான முதல் வெளிநாட்டு பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஷான் டைட். செப்டம்பர் மாத இறுதியில் புதுச்சேரி அணியுடன் சேர உள்ளார்.
ஷான் டைட் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, எங்களுடன் சேர்ந்து பணியாற்ற அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இன்டர்நேஷனல் போட்டிகளில் கலந்து கொள்ளாத பொழுது புதுச்சேரி அணி வீரர்களுக்கு பந்துவீச்சு பயிற்சி அளிப்பார் என்று புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேசன் தெரிவித்துள்ளது.
ஷான் டைட் ஆஸ்திரேலியா அணிக்காக மூன்று டெஸ்ட், 35 ஒருநாள் போட்டி மற்றும் 21 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். புதுச்சேரி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராஜஸ்தானை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் திசாந்த் யாக்னிக் நியமிக்கபட்டுள்ளார். புதுச்சேரியில் இயற்கையாகவே திறமைவாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கு வழிகாட்ட இன்னுமொரு சிறந்த வேகப்பந்து பயிற்சியாளர் தேவை. புதுச்சேரியில் உள்ள அனைத்து வயது வீரர்களுக்கும் ஷான் டைட் பயிற்சி உதவிகரமாக இருக்கும்.
கடந்த வாரம் பிசிசிஐ உள்ளூர் போட்டிகளுக்கான விரிவான அட்டவணையை வெளியிட்டு இருந்தது. அதன்படி சையது முஷ்டாக் அலி டிராபி பைனல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்றும், ராஞ்சி ஃபைனல் போட்டிகள் மார்ச் 16-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் என்றும் அறிவித்தது. அனைத்து அணிகளுக்கும் பொதுவான மைதானங்களே சையது முஷ்டாக் அலி டிராபி போட்டிகளுக்கு வழங்கப்படும். ரஞ்சி கோப்பை அடுத்த வருடம் ஜனவரி 13ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்னர் விஜய் ஹசவுள்ளதுாரே போட்டி டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
ALSO READ இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா உறுதி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR