இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 191 ரன்கள் குவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்த நிலையில், தற்போது டெஸ்ட தொடர் நடைப்பெற்று வருகின்றது.


இத்தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி டிச., 6-ஆம் நாள் காலை 5.30 மணியளவில் துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 2(8), முரளி விஜய் 11(22) ரன்களுக்கு வெளியேற, முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய புஜாரா நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். 246 பந்துகளில் 123 ரன்கள் குவித்த புஜாரா ஆட்டத்தின் 87.5-வது பந்தில் வெளியேறினார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற புஜாராவின் சதம் இந்தியாவினை 250 ரன்கள் குவிக்க உதவியது.



முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் குவித்தது. களதிதல் முகமது ஷமி 6(9), ஜாஸ்பிரிட் பும்ரா 0(0) ரன்களுடன் இருந்தனர். இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் காலை துவங்கியது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஷமி வெளியேற, இந்தியா 250 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸி., அணி வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் சிக்கி தவித்தனர்.


தொடக்க வீரராக களமிறங்கிய பின்ச் 0(3) ரன்களில் வெளியேற மார்கஸ் ஹரிஸ் 26(57), உஸ்மான் கவாஜா 28(125) ரன்களில் வெளியேறினர். நான்காம் விக்கெட்டுக்கு களமிறங்கிய டார்விஸ் ஹெட் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 61(149) குவித்து களத்தில் உள்ளார். இவருடன் மிட்செல் ஸ்ட்ராச் 8(17) ரன்களுடன் களத்தில் உள்ளார்.


இந்தியா தரப்பில் அஸ்வின் 3 விக்கெட், பூம்ரா மற்றும் இஷான்ட் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை குவித்துள்ளனர்.


தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா 88 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்துள்ளது. இந்தியாவின் ரன்களை விட 59 ரன்கள் குறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.