கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த ஒருநாள் தொடரை ஒத்திவைக்க ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் ஒப்புக்கொண்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் தொடரை நடத்துவதில் சிரமம் இருப்பதால் மூன்று ஒருநாள் போட்டிக் கொண்ட ஆகஸ்ட் மாத தொடரை ஒத்திவைக்க ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே ஒப்புக் கொண்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.


READ | ஸ்டீவ் ஸ்மித்தை நான் ஏன் கேலி செய்தேன்...? மனம் திறக்கும் இஷாந்த் சர்மா!...


ஆஸ்திரேலியாவின் தூர வடக்கில் தீர்மானிக்கப்படாத ஒரு இடத்தில் ஜிம்பாப்வே முதல் போட்டியை விளையாடவிருந்தது, இந்த போட்டி ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை மூன்று ஒருநாள் போட்டிகள் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த தொடரை ஒத்தி வைக்க இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக்கொண்டுள்ளது.


இந்த முடிவு பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும், "மாற்று தேதிகளில்" தொடரை விளையாடுவதில் அணிகள் உறுதியாக இருப்பதாகவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


தொடரை ஒத்திவைப்பதில் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ள நிலையில், வீரர்கள், போட்டி அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் எங்கள் ரசிகர்களின் சிறந்த நலனுக்காக, இது மிகவும் நடைமுறை மற்றும் விவேகமான முடிவாக இருக்கிறோம் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது அறிவிப்பில் குறிப்பிடுள்ளது.


முன்னதாக மார்ச் 13 அன்று ஆஸ்திரேலியா கடைசியாக ஒரு சர்வதேச போட்டியில் விளையாடியது, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்தை மூடிய கதவுகளுக்கு பின்னால் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


READ | ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பார்வையில் இவர் தான் சிறந்த பீல்டர்...


இங்கிலாந்தின் கிரிக்கெட் இயக்குனர் ஆஷ்லே கில்ஸ் கடந்த வாரம் ஆஸ்திரேலியா பிரிட்டனில் ஒருநாள் தொடரை விளையாட ஒப்புக்கொள்ளும் என நம்புவதாக தெரிவித்திருந்தார்.